மதுரையில் தற்போது சித்திரைத் திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலிருந்தும் மக்கள் மதுரையில் குவிந்துள்ளனர். நாளை மதுரை மீனாட்சி அம்மனுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இன்று அதிகாலை அண்ணா நகரில் உள்ள ராமர் கோவில் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிளில் குண்டு ஒன்று வெடித்து மதுரை மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இதுகுறித்து மதுரை உதவி கொமிஷனர் வெள்ளத்துரை பொலிஸாருக்கு குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிக்க உத்தரவிட்டுள்ளார்.
மேலும் வருகிற 10ம் திகதி மதுரையில் பாஜகவின் தேசிய மாநாடு நடைபெறவுள்ளது. இம்மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, நரேந்திர மோடி, சுஷ்மா சுவராஜ், நிதின் கட்காரி ஆகியோர் வருகை தருகின்றனர்.
இந்நிலையில் இக்குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளமை மதுரையில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

|