இந்தியச் செய்தி
கீதிகா சர்மா தற்கொலை: மாஜி அமைச்சர் கோபால் கண்டா விரைவில் கைது
[ செவ்வாய்க்கிழமை, 07 ஓகஸ்ட் 2012, 06:44.09 AM GMT +05:30 ]
விமானப்பணிப்பெண் கீதிகா சர்மா கொலை வழக்கில் தொடர்புடைய மாஜி அமைச்சர் கோபால் கண்டாவை கைது செய்யும் நடவடிக்கைகள் தீவிரமாகியுள்ளது.

விமானப்பணிப்பெண்ணான கீதிகா சர்மா, கோபால் கண்டாவின் விமான நிறுவனமொன்றில் பணியாற்றி வந்தார். இந்நிறுவனம் 2009ம் ஆண்டு மூடப்பட்டவுடன் தனது இன்னொரு நிறுவனத்தில் வேலை வழங்குவதாக கூறினார்.

ஆனால் துபாய் சென்று மற்றொரு நிறுவனத்தில் கீதிகா பணியாற்றினார். அப்போது துபாய் நிறுவனத்திற்கு கோபால் கண்டா, கீதிகா நடத்தை சரியில்லாதவள் என தெரிவித்து அந்த வேலையை பறித்தார்.

இதனால் மனமுடைந்துபோன கீதிகா, மீண்டும் கோபால் கண்டாவின் சூப்பர் சானிக் என்ற நிறுவனத்தில் கடந்த ஆண்டு பணிக்கு சேர்ந்தார். இருப்பினும் தனக்கு இப்பணி பிடிக்க வில்லை என்று கூறிய கீதிகா ஒன்றரை மாதத்திற்கு முன்பு விலகினார்.

இந்நிலையில் மீண்டும் கீதிகாவை கோபால் கண்டா மிரட்டியதாகவும் அதன் காரணமாகவே கீதிகா தற்கொலை செய்து கொண்டதாகவும் அவர் எழுதிய இரண்டு பக்க கடிதம் தெரிவிக்கின்றது.

அக்கடிதத்தில், கோபால் கண்டா ஒரு மோசடிக்காரன். பெண்களை தவறாக நினைப்பவன். எந்த தவறை செய்யவும் வெட்கமோ, கூச்சமோ படாதவன்.

என் பெற்றோர் ஏதுமறியா அப்பாவிகளாக இருந்தை அவர்கள் இருவரும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்கள். இனிமேலும் அவர்களது கொடுமைகளை பொறுக்க என்னால் முடியாது. அவர்களது டார்ச்சரில் இருந்து தப்பிக்க இந்த முடிவை எடுத்திருக்கிறேன் என்று தனது கடிதத்தில் கீதிகா எழுதியுள்ளார்.

இதையடுத்து, இளம்பெண்ணை தற்கொலை செய்ய தூண்டியதாக அரியானா அமைச்சர் கோபால் கண்டா மீது இந்திய தண்டனை சட்டம் 306-வது பிரிவின் டெல்லி பொலிஸார் வழக்கு பதிவு செய்தனர்.

அமைச்சர் பதவியை கோபால் நேற்று இரவு ராஜினாமா செய்தார். வழக்கு விசாரணைக்கு இடைஞ்சலாக இருக்க கூடாது என்பதால் பதவி விலகியுள்ளேன்.

அறிவுள்ள பெண்ணான கீதிகா ஏன் இந்த முடிவுக்கு வந்தார் என்று தெரியவில்லை. எந்த ஊழியருடனும் நான் நேரடி தொடர்பு வைத்துக் கொண்டதில்லை. விசாரணையில் உண்மைகள் தெரியும் என்று அவர் கூறினார்.

ஆபீசில் வேலை இருப்பதாக கூறி இரவு நேரங்களிலும் கீதிகாவை கோபால் கண்டா அழைப்பார் என்றும் கண்ட இடத்தில் தொட்டு அநாகரிகமாக நடந்துகொள்கிறார் என்று தாய் அனுராதாவிடம் கீதிகா பல முறை சொல்லி அழுதிருக்கிறார் என்று அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

கீதிகாவை தன் கம்பெனிக்கு வேலைக்கு அனுப்புங்கள் என்று கேட்டு மனைவியுடன் அவரது வீட்டுக்கே வந்து கோபால் கண்டா அவரது பெற்றோரிடம் பேசியுள்ளார் என்றும் தெரியவந்தது.

நியாயமான முறையில் விசாரணை நடத்தப்படும் என்று அரியானா முதல்வர் பூபீந்தர் சிங் ஹூடா தெரிவித்தார்.

தேசிய மகளிர் கொமிஷன் இதுபற்றி விசாரிக்கும் என்று மத்திய அமைச்சர் கிருஷ்ணா தீரத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், கோபால் கண்டாவை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று இந்திய தேசிய லோக் தளம் தொடர்ந்து கோரி வருகிறது.

கோபால் கண்டா எந்நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது. கீதிகாவின் செல்போன் பேச்சுகள், கம்ப்யூட்டரில் அவர் பதிவு செய்து வைத்திருந்த தகவல்கள் தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது. கீதிகாவின் உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.

Print Send Feedback
One moment please..
 
 
   
   
   
   
   
 
பிந்திய 10 செய்திகள்

நடுவானில் தவிர்க்கப்பட்ட பாரிய விபத்து: பயணிகளின் திக் திக் நிமிடங்கள்

இராணுவத்தினருக்கும்- பயங்கரவாதிகளுக்கும் சண்டை: மூன்று பேர் பலி

பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட எஸ்.ஐ

வரலாற்றில் முதன் முறையாக அமெரிக்க நீதிபதியாக இந்தியர் நியமனம்

சூதாட்டம் விளையாட்டுக்கே அவப்பெயரை தந்துள்ளது: நடிகை தீபிகா படுகோன்

துப்பாக்கியுடன் சினிமா பைனான்சியர் அட்டகாசம்

என் அம்மா போல் நான் கிடையாது: ராகுல் காந்தி எச்சரிக்கை

மலேசியாவில் 4 தமிழர்களுக்கு மரண தண்டனை

கணவனுடன் வெப்-கேமராவில் சண்டையிட்ட மனைவி தற்கொலை

உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் வரிசையில் சோனியா காந்தி 9-வது இடம்

 
   
   
 
 
   
   
 
 
   
   
 
28 ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: தாமோதரம்பிள்ளை சேதுப்பிள்ளை குடும்பத்தினர்
பிறந்த இடம்: நெடுந்தீவு மேற்கு
வாழ்ந்த இடம்: திருகோணமலை
பிரசுரித்த திகதி: 23 மே 2013
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: மதுரநாயகம் பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
பணியில் ஈடுபட்டிருந்த பொலிசாரிடையே மோதல்: ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதால் பரபரப்பு
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 02:28.22 AM ] []
பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது, இரு பொலிசார்கள் திடீரென மோதிக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. [மேலும்]
சுபாஷ் சந்திர போஸின் அஸ்தி எங்கே? உடனடியாக பதிலளிக்கும்படி நீதிபதிகள் உத்தரவு
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 01:44.57 AM ]
நேதாஜி சுபாஷ் சந்திர போசின் அஸ்தி எங்கு இருக்கிறது என்பதை உடனடியாக தெரிவிக்க வேண்டுமென மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. [மேலும்]
பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பிடித்து பார்வையற்ற மாணவி சாதனை
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 01:35.33 AM ]
மத்திய பிரதேசத்தில் பிளஸ் 2 தேர்வில் கண் பார்வையற்ற மாணவி மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். [மேலும்]
காந்தி தாத்தா ரத்தம் ஏலமா? என் ரத்தம் கொதிக்கிறது: கொள்ளுப்பேரன் வேதனை
[ புதன்கிழமை, 22 மே 2013, 07:39.26 AM ]
மகாத்மா காந்தியின் ரத்தம் தோய்ந்த பொருட்கள் ஏலம் விடப்படுவதை தடுக்க முடியவில்லையே என அவரது கொள்ளுப்பேரன் துஷார் காந்தி வேதனை தெரிவித்துள்ளார். [மேலும்]
இந்தியாவிடமிருந்து மின்சாரம் வாங்கும் திட்டத்தில் பாகிஸ்தான்
[ புதன்கிழமை, 22 மே 2013, 07:35.31 AM ]
கடும் மின் தட்டுப்பாடால் அவதிப்பட்டு வரும் பாகிஸ்தான், இந்தியாவிடமிருந்து 1000 மெகா வாட் மின்சாரம் வாங்கும் திட்டத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது. [மேலும்]