நேற்றிரவு சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, இலங்கை ஜனாதிபதி ராஜபக்சவிற்கு எதிரான தங்களது போராட்டம் தொடரும்.
இலங்கை பிரச்னையில் அனைத்து கட்சிகளும் இணைந்து போராட வேண்டும் என்ற திமுக தலைவர் கருணாநிதியின் கருத்து பற்றிய கேள்விக்கு பதிலளிக்கையில், திமுகவோடு கை கோர்க்கும் பேச்சுக்கே இடமில்லை என்றும் இலங்கையில் இனப்படுகொலை நடந்த காலத்தில் அதை தடுக்காமல் இருந்து விட்டு இன்று கருணாநிதி நாடகம் ஆடுவதாக மதிமுக பொதுச்செயலர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
முன்னதாக புதுடெல்லியில் இலங்கை ஜனாதிபதியின் இந்திய வருகையை கண்டித்து போராட்டம் நடத்திய வைகோ உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். |