இத்தகவலை இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவர் வி.கே. சரஸ்வத் தெரிவித்துள்ளார்.
அக்னி-6 ஏவுகணை சுமார் 6 ஆயிரம் கிலோ மீற்றர் தூரம் வரை பாய்ந்து சென்று தாக்கும் ஆற்றல் கொண்டது என்றும் சரஸ்வத் கூறியுள்ளார்.
மேலும், ஒரே ஏவுகணையில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆயுதங்களை பொருத்த முடியும் என்றும் கூறப்படுகிறது.
இந்த ஏவுகணைக்கான வடிவமைப்பு பணிகள் முடிவடைந்துள்ளதாகவும், அதை தயாரிப்பதற்கான முதல்கட்டப் பணிகள் தொடங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அக்னி-6 ஏவுகணை உருவாக்கப்பட்டால் இத்தகைய அதிநவீன ஏவுகணைகளை கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம்பெறும். |