இந்தியச் செய்தி
பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்த்த இந்திய அதிகாரி கைது
[ செவ்வாய்க்கிழமை, 05 மார்ச் 2013, 05:55.07 AM GMT +05:30 ]
இந்திய வான் படை போர் ஒத்திகை குறித்த தகவல்களை பாகிஸ்தான் உளவாளி ஒருவனுக்கு வழங்கியதாக உள்துறை அமைச்சக அதிகாரி கைது செய்யப்பட்டார்.

இந்திய வான் படை சார்பில், குண்டு வீசிதாக்குதல் உள்ளிட்ட போர் ஒத்திகை நிகழ்ச்சி கடந்த பெப்ரவரி மாதம் 22ம் திகதி, ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் நடந்தது. இதில் பிரதமர் மன்மோகன்சிங், ஜனாபதி பிரணாப் முகர்ஜி, இராணுவ அமைச்சர் அந்தோணி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் ராஜஸ்தானின் ஜெய்சல்மாரில் சந்தேகத்தின் பேரில் ஒருவனை, புலனாய்வுப்பிரிவு பொலிசார் பெப்ரவரி 25ம் திகதி கைது செய்து விசாரித்தனர். அவனது பெயர் சுமர்கான் (வயது 34) எனவும், பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ.உளவாளி என்பதும் தெரிய வந்தது.

அவன் கொடுத்த தகவலின்பேரில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஊழியர் சுரேந்திரா என்பவரிடம், போர் ஒத்திகை தொடர்பான ரகசிய ஆவணங்களை வாங்கியதாகவும் கூறினான்.

இது குறித்து புலனாய்வுத்துறையின் ராஜஸ்தான் பிரிவு இயக்குனர் ஜெனரல் தல்பாத் சிங் திங்கார் கூறுகையில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் 4-வது கிரேடு அலுவலராக பணியாற்றி வந்த, ஜெய்சல்மார் நகரைச் சேர்ந்த சுரேந்திரா என்பவர் மீது கடந்த சில நாட்களாக சந்தேகம் ஏற்பட்டது.

அவரது மின்னஞ்சல்கள், போன் உரையாடல்களை கண்காணித்து வந்த நிலையில் அவர்தான் போர் ஒத்திகை அலுவலக ரகசியங்களை, பாக். உளவாளி சுமர்கானிடம் அளித்துள்ளார். சுரேந்திரா மீது அலுவலக ரகசியங்களை கசியவிட்டது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தோம்.

சுமர்கான், சுரேந்திரா ஆகிய இருவரும் இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர் என்றார்.

Print Send Feedback
One moment please..
 
 
   
   
   
   
   
 
பிந்திய 10 செய்திகள்

இந்தியாவில் நீருக்கடியில் உணவகம்: ஒரே நாளில் மூடப்பட்டது (வீடியோ இணைப்பு)

ஆண்டுக்கு 5 ஆயிரம் தலித்துகள் சந்தேக மரணம்- தமிழக அரசு நீதி விசாரணைக்கு ஆணையிட வேண்டும்! தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

இலங்கையின் புதிய வேலைத்திட்டங்களுக்கு இந்தியா பூரண ஆதரவு வழங்கும்: சுஷ்மா சுவராஜ்

மணமக்கள் நெற்றியில் அலங்கரித்த “அம்மா ஸ்டிக்கர்”

முதன்முறையாக இந்தியாவுக்கு வரும் இளவரச தம்பதி

தமிழக அரசுக்கு தேசிய விருதை வழங்கினார் அமைச்சர் அருண் ஜெட்லி

டுவிட்டரில் மீம்ஸ்களை தெறிக்க விடும் தேர்தல் ஆணையம்

நடுக்கடலில் அணிவகுத்து நின்ற போர்க் கப்பல்கள்: 360 டிகிரி கோணத்தில் அசத்தலான வீடியோ

தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சசிரேகா: கொன்றது ஏன்? வில்லன் நடிகர் பரபரப்பு வாக்குமூலம்

ஐய்யப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க முடியாது: கேரள அரசு

 
   
   
 
 
   
   
 
 
   
   
 
மரண அறிவித்தல்
பெயர்: சிவராசா சிவபாக்கியநாதன்
பிறந்த இடம்: யாழ். சுழிபுரம்
வாழ்ந்த இடம்: பிரான்ஸ் Lyon
பிரசுரித்த திகதி: 29 சனவரி 2016
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
கடலில் கரை ஒதுங்கிய மதுப்புட்டியில் காதலர்களின் சுவாரசிய கடிதம்
[ வெள்ளிக்கிழமை, 05 பெப்ரவரி 2016, 06:21.11 AM ] []
மாமல்லபுரத்தில் கரை ஒதுங்கிய மதுப்புட்டியில் ஸ்காட்லாந்து தம்பதி எழுதிய கடிதம் கண்டுபிடிக்கப்பட்ட சுவாரசிய சம்பவம் நடந்துள்ளது. [மேலும்]
ஷூ வாங்கி கொள்ளுங்கள்: முதல்வருக்கு டிடி அனுப்பிய இன்ஜினியர்
[ வெள்ளிக்கிழமை, 05 பெப்ரவரி 2016, 06:04.41 AM ] []
டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு விசாகப்பட்டினத்தை சேர்ந்த இன்ஜினியர் ஒருவர் ரூ.364க்கான டிடியை அனுப்பியுள்ளார். [மேலும்]
நடிகர் சிரஞ்சீவி மருத்துவமனையில் அனுமதி
[ வியாழக்கிழமை, 04 பெப்ரவரி 2016, 06:03.07 PM ] []
தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி தோள்பட்டையில் அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். [மேலும்]
’பீப்’ பாடலுக்கு எதிராக போராடிய மாதர் சங்கம் இப்போது எங்கே ? டி.ராஜேந்தர் அதிரடி
[ வியாழக்கிழமை, 04 பெப்ரவரி 2016, 10:59.32 AM ] []
கள்ளக்குறிச்சி மாணவிகள் 3 பேர் மரணம் குறித்து போராடாமல் மாதர் சங்கத்தினர் எங்கே போனார்கள் என்று டி.ராஜேந்தர் கேள்வி எழுப்பியுள்ளார். [மேலும்]
சதியால் ஜேர்மனி அகதிகள் முகாமில் சிக்கிய இந்தியப் பெண்!
[ வியாழக்கிழமை, 04 பெப்ரவரி 2016, 10:30.39 AM ] []
ஜேர்மனியில் கணவர் வீட்டாரின் சதியால் அகதிகள் முகாமில் சிக்கியுள்ள இந்தியப் பெண்ணை மீட்க இந்திய வெளிவிகாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. [மேலும்]