இந்தியச் செய்தி
சர்வதேச பெண்கள் தினத்தில் மறைந்த டெல்லி மாணவிக்கு அமெரிக்க வீரமங்கை விருது
[ செவ்வாய்க்கிழமை, 05 மார்ச் 2013, 05:05.18 AM GMT +05:30 ]
டெல்லியில் பாலியல் வன்கொடுமைக்குள்ளாகி உயிரிழந்த மருத்துவ மாணவிக்கு அமெரிக்கா வீரமங்கை விருது வழங்க உள்ளது.

சர்வதேச பெண்கள் தினமான மார்ச் 8ம் திகதி இந்த விருதை, அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா மற்றும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி ஆகியோர் வழங்க உள்ளனர்.

உயிரிழந்த மாணவி, தனது மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள தைரியமாக போராடியதாகவும், காவல்துறைக்கு அளித்த வாக்குமூலத்தில் குற்றவாளிகள் ஆறு பேருக்கும் உரிய தண்டனை வழங்க வலியுறுத்தியதையும் அமெரிக்கா பாராட்டியுள்ளது.

மேலும், நீதி கேட்டும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு எதிராகவும், மாணவியின் குடும்பத்தினர் நடத்தி வரும் தொடர் போராட்டத்தையும் அமெரிக்க அரசு வெகுவாகப் புகழ்ந்துள்ளது.

மாணவியின் உயிரிழப்பு, இந்தியா மட்டும் அல்லாமல் பல்வேறு நாடுகளில் பெண்கள் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளதாகவும் விருது தொடர்பான அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் உலகம் முழுவதிலும் இருந்து பெண்களின் முன்னேற்றத்திற்காக தைரியமாக போராடிய பெண்களுக்கு அமெரிக்க அரசு வீரமங்கை விருதினை வழங்கி வருகிறது.

கடந்த 2007ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் இந்த விருது இதுவரை 45 நாடுகளைச் சேர்ந்த 67 பெண்மணிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 10 பெண்கள் இந்த விருதினை பெற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Print Send Feedback
One moment please..
 
 
   
   
   
   
   
 
பிந்திய 10 செய்திகள்
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
அகாலமரணம்
பெயர்: ஸ்ரீகாந்தன் சண்முகலிங்கம்
பிறந்த இடம்: யாழ். அரியாலை
வாழ்ந்த இடம்: பிரான்ஸ்
பிரசுரித்த திகதி: 15 ஓகஸ்ட் 2014
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
உனக்கு 73… எனக்கு 67: ஆந்திராவில் அசத்தல் திருமணம்
[ வெள்ளிக்கிழமை, 22 ஓகஸ்ட் 2014, 06:21.36 AM ] []
ஆந்திர மாநிலத்தில் 73 வயது நிரம்பிய மணமகனுக்கும், 67 வயது நிரம்பிய மணமகளுக்கும் அதிசய திருமணம் நடந்துள்ளது. [மேலும்]
கனிமொழி- ஸ்டாலின் மோதல்! திமுகவின் உச்சகட்ட பனிப்போர்
[ வெள்ளிக்கிழமை, 22 ஓகஸ்ட் 2014, 06:14.20 AM ] []
திமுகவில் இருந்து மு.க.அழகிரி நிரந்தரமாக நீக்கப்பட்டிருக்கும் இந்த வேளையில், தற்போது மு.க.ஸ்டாலின்- கனிமொழிக்கு இடையேயான மோதல் அதிகரித்து வருவதாக தெரிகிறது. [மேலும்]
பாலியல் தொழில் ராணிகளின் பிடியில் காங்கிரஸ் பிரபலங்கள்: கேரளாவில் பரபரப்பு (ஓடியோ இணைப்பு)
[ வெள்ளிக்கிழமை, 22 ஓகஸ்ட் 2014, 05:59.01 AM ] []
முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் மீது கேரள பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
18 வயதை தொடாத பிரபல நடிகைகள் மீது வழக்கு
[ வெள்ளிக்கிழமை, 22 ஓகஸ்ட் 2014, 05:37.08 AM ] []
தமிழ் திரைப்படங்களில் 18 வயது கூட நிரம்பாத பெண்களை நடிக்க தடை செய்ய வேண்டும் என பெண் ஒருவர் வழக்கு தொடர்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
தந்தைக்காக 5 இளைஞர்களை துவம்சம் செய்த இளம்பெண்
[ வியாழக்கிழமை, 21 ஓகஸ்ட் 2014, 01:54.49 PM ] []
உத்தரபிரதேசத்தில் 16 வயது இளம் பெண் ஒருவர் தனது தந்தையை காப்பாற்ற 5 இளைஞர்களை எதிர்த்து நின்று போராடி அடித்து விரட்டியுள்ளார். [மேலும்]