தமிழ்நாட்டுச் செய்தி
மயங்கிய முதியவருக்கு உதவிய பிச்சைக்காரர்: வேடிக்கை பார்த்த பொதுமக்கள்
[ புதன்கிழமை, 03 ஏப்ரல் 2013, 07:56.53 AM GMT +05:30 ]
மயங்கி விழுந்த முதியவர் குறித்து அந்த பகுதியில் இருந்த யாரும் கவலைப்படாத நிலையில், தன் தட்டில் இருந்த சில்லரை காசுகளை எடுத்து தண்ணீர் பாக்கெட் வாங்கி முதியவருக்கு கொடுத்த பிச்சைக்காரரின் மனிதநேயத்தை பலரும் பாராட்டினர்.

சென்னை தி.நகர் பேருந்து நிலையம் செல்ல, மார்க்கெட் வழியாக, 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர், நேற்று முன்தினம் காலை, 9:00 மணிக்கு நடந்து சென்றார். வெயில் சுட்டெரித்ததால், நடக்க முடியாமல் தள்ளாடிய அவர், திடீரென நடைபாதையில் மயங்கி விழுந்தார்.

அவரது சட்டை பையில் இருந்த, 100 ரூபாய் தாள்கள், கீழே விழுந்து சிதறி கிடந்தன. அந்த வழியாக சென்ற பலரும், சுற்றி நின்று வேடிக்கை பார்த்தனரே தவிர, யாரும் உதவ முன்வரவில்லை. நடைபாதையில் பிச்சை எடுத்தவர், முதியவரை பார்த்ததும், பதறிபோய், தட்டில் கிடந்த காசை எடுத்து, தண்ணீர் பாக்கெட் வாங்கி வந்து, முதியவர் முகத்தில் தெளித்தார். காற்றோட்டமான சூழ்நிலையை ஏற்படுத்தி, குடிக்க தண்ணீர் கொடுத்தார். சிதறிய ரூபாய் தாள்களை, முதியவரின் சட்டைப் பையில் வைத்து, உட்கார வைத்தார்.

பிச்சைக்காரரின் மனிதாபிமானம்: பிச்சைக்காரர் உதவவே, கூட்டத்தில் இருந்த சிலர், முதலுதவி செய்ய முன் வந்தனர். பின், ஆம்புலன்சுக்கு போன் செய்து, முதியவரின் வீட்டுக்கும் தகவல் தெரிவித்தனர். முதியவருக்கு பலரும் உதவியதால், கூட்டத்தில் இருந்து விலகி சென்ற பிச்சைக்காரர், "அண்ணன் என்னடா, தம்பி என்னடா அவசரமான உலகத்திலே...' என, முணுமுணுத்து கொண்டே, தட்டை ஏந்தியபடி, தம் கடமையை செய்ய தயாரானார்.

சில்லரை இருந்தா போடுங்க: முதியவரின் உறவினர்கள், சம்பவ இடத்திற்கு வந்து, உதவிய பிச்சைக்காரருக்கு, 100 ரூபாய் கொடுத்தனர். உடனே அவர், "எனக்கு நோட்டு கொடுத்தா, மாத்த தெரியாதுங்க. சில்லரை இருந்தா போடுங்க' என்றதும், நெகிழ்ந்து போன உறவினர்கள், பிச்சைக்காரருக்கு சாப்பாடு வாங்கி கொடுத்தனர். எவ்வளவு எடுத்து கூறியும், பணம் வாங்காததால், சில்லரைகளை தட்டில் போட்டு, நன்றி கூறிவிட்டு சென்றனர். கூட்டத்தில் இருந்த பலரும், பிச்சைக்காரரை புகழ்ந்து பேசியபோதும், எதையும் சட்டை பண்ணாமல், தட்டை ஏந்தியபடி, பாடல் வரிகளை முணுமுணுத்து கொண்டிருந்தார் அவர்.

Print Send Feedback
One moment please..
 
 
   
   
   
   
   
 
பிந்திய 10 செய்திகள்

காதல் தோல்வி: தூக்கில் தொங்கிய பாலிவுட் நடிகை (வீடியோ இணைப்பு)

அதிமுக அலுவலகம் முதல்….அம்மா வீடு வரை!

துடைப்பத்துடன் களமிறங்கிய அமைச்சர்கள்: பின்னணி என்ன? (வீடியோ இணைப்பு)

நடிகை ஸ்வேதா பாசுவிற்கு "செக்" வைத்த நீதிமன்றம் (வீடியோ இணைப்பு)

ஜெயலலிதாவுக்கு ஜெயில்… குன்ஹாவுக்கு நன்றி: போஸ்டரால் பட்டையை கிளப்பும் விஜய் ரசிகர்கள்

அம்மா உணவகத்தில் சப்பாத்தி விற்பனை “டல்”

தமிழக முதல்வர் அறையில் ஒரே குழப்பம்!

மக்கள் மன்றத்தில் பகை தீர்க்க முடியாததால்…இந்த வழக்கில் பழி தீர்த்து விட்டனர்: ஜெயலலிதா ஆவேசம்

செப்டம்பர் 27ம் திகதி நீதிமன்றத்தில் நடந்தது என்ன? ஒரு லைவ்

ஜெயலலிதாவுக்கு ஜெயில்….தமிழகத்தில் அரங்கேறும் தற்கொலைகள்: கணக்கெடுக்கும் உளவுத்துறை

 
   
   
 
 
   
   
 
 
   
   
 
1ம் ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: முகேஸ்குமார் ரவிகுமார்
பிறந்த இடம்: லண்டன்
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 1 ஒக்ரோபர் 2014
மரண அறிவித்தல்
பெயர்: இன்னாசித்தம்பி ஆரோக்கியநாதன்
பிறந்த இடம்: யாழ். பெரியவிளான்
வாழ்ந்த இடம்: கனடா
பிரசுரித்த திகதி: 1 ஒக்ரோபர் 2014
31ம் நாள் நினைவஞ்சலி
பெயர்: சிறி முருகதாஸ் பாலசுப்பிரமணியம்
பிறந்த இடம்: யாழ். கொக்குவில்
வாழ்ந்த இடம்: ஜெர்மனி
பிரசுரித்த திகதி: 30 செப்ரெம்பர் 2014
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
கண்ணீரும்..கம்பளையுமாக பதவியேற்ற அமைச்சர்கள்! (வீடியோ இணைப்பு)
[ திங்கட்கிழமை, 29 செப்ரெம்பர் 2014, 12:28.53 PM ] []
தமிழ்நாட்டில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் அமைச்சர்கள் கண்ணீர் மல்க பதவியேற்றுள்ளனர். [மேலும்]
ஜெயலலிதாவுக்கு ஆதரவாக உண்ணாவிரதத்தில் குதிக்கும் தமிழ் திரையுலகம்
[ திங்கட்கிழமை, 29 செப்ரெம்பர் 2014, 12:05.42 PM ]
சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவுக்கு தமிழ் திரையுலகம் சார்பில் நாளை உண்ணாவிரதம் நடத்தப்படவுள்ளது. [மேலும்]
விரைவில் ரஜினி அரசியலுக்கு வருகிறாரா? பாஜகவின் புது வியூகம்
[ திங்கட்கிழமை, 29 செப்ரெம்பர் 2014, 11:35.01 AM ] []
சொத்து குவிப்பு வழக்கின் தண்டனை மூலம் ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியாத சூழ்நிலை இருப்பதால் அரசியல் கட்சிகள் புது வியூகங்கள் வகுக்க துவங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. [மேலும்]
ஜெயலலிதா வழக்கில் மோடி: சொல்கிறார் சாமி
[ திங்கட்கிழமை, 29 செப்ரெம்பர் 2014, 08:39.36 AM ] []
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் நான் தலையிட மாட்டேன் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியதாக சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார். [மேலும்]
ஜெயலலிதாவுக்கு வயிற்றுவலியை ஏற்படுத்திய இட்லி...சாம்பார்
[ திங்கட்கிழமை, 29 செப்ரெம்பர் 2014, 07:04.30 AM ] []
பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவுக்கு சற்று லேசான வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. [மேலும்]