இந்தியச் செய்தி
தேர்தலில் நான் போட்டியிட போவதில்லை: அன்னா ஹசாரே
[ வெள்ளிக்கிழமை, 03 ஓகஸ்ட் 2012, 03:31.23 PM GMT +05:30 ]
அன்னா குழுவினரின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவிசாய்க்காத நிலையில், அரசியல் மாற்றத்தை கொண்டுவரும் பொருட்டு புதிய அரசியல் கட்சியை துவக்கவுள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மறுசீரமைப்பிற்கான நேரம் வந்துவிட்டதாக அவர் கூறியுள்ள நிலையில், தேர்தலில் தான் போட்டியிட போவதில்லை என ஹசாரே தெரிவித்துள்ளார்.

வலிமையான லோக்பால் மசோதா, ஊழல் கறை படிந்த பிரதமர் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களை விசாரிக்க சிறப்பு குழு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 10 நாட்களாக டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் அன்னா குழுவினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

4 நாட்களுக்குப்பிறகு இப்போராட்டத்தில் அன்னா ஹசாரேவும் கலந்து கொண்டார். இந்நிலையில், அன்னா குழுவினரின் கோரிக்கைகள் குறித்து மத்திய அரசு இதுவரை கண்டுகொள்ளவே இல்லை. இதற்கு முன் அன்னா குழுவினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய போது, உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட மத்திய அரசு, இம்முறை போராட்டத்தை கண்டுகொள்ளாதது அன்னா குழுவினருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, தங்கள் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் விதமாக, அரசியல் கட்சி ஒன்றை துவக்கும் முடிவில் அன்னா ஹசாரே குழு இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஊழலுக்கு எதிரான இந்தியா என்ற தலைப்பில் இணையதளத்தில் இது குறித்து கருத்துக்கள் கேட்கப்பட்டன. தொடர்ந்து இன்று மாலை 5 மணியுடன் உண்ணாவிரதப் போராட்டத்தை அன்னா குழு முடித்துக் கொள்ளும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்ற மாலை 5 மணியுடன் அன்னா குழுவினரின் உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு வந்தது.

உண்ணாவிரதப் போராட்ட முடிவில் பொதுமக்கள் மத்தியில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், தற்போதுள்ள சூழலில் பார்லிமென்ட்டை மறுசீரமைப்பு செய்யக்கூடிய நேரம் வந்து விட்டது. இதற்காக அரசியல் கட்சி அமைத்து அன்னா குழு போராடும்.

பொதுமக்களிடம் ஓட்டு வங்கி அரசியலுக்கு எதிராக தங்கள் அமைப்பு செயல்படும். தங்கள் கட்சி செயல் திட்டங்கள் நிச்சயம் ஏ.சி., ரூமில் அமர்ந்து உருவாக்கப்படமாட்டாது. வேட்பாளர்கள் தேர்வு வெளிப்படையாக அமையும் என்று தெரிவித்தார்.

புதிய அரசியல் கட்சி அறிவிப்பை அன்னா குழு வெளியிட்டுள்ள நிலையில், ஒரு போதும் தான் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.

Print Send Feedback
One moment please..
 
 
   
   
   
   
   
 
பிந்திய 10 செய்திகள்

கணவனுடன் வெப்-கேமராவில் சண்டையிட்ட மனைவி தற்கொலை..!

உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் வரிசையில் சோனியா காந்தி 9-வது இடம்

செம்மொழி அந்தஸ்து பெற்றது மலையாள மொழி : மத்திய அமைச்சரவை தீர்மானம்

தாலி கட்டும் தருணதில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்

கள்ளக் காதலை கணவன் கண்டித்ததால் மனைவி ஆசிட் குடித்து தற்கொலை

பாகிஸ்தான் நோயாளிக்கு இதயம் கொடுத்து காப்பாற்றிய இந்தியா

சுகாதாரத் துறையில் இணைந்து செயல்பட இந்தியா-சீனா முடிவு

ஐ.பி.எல். சூதாட்டம் தொடர்பாக 9 தரகர்கள் கைது

கணவர் கொலை வழக்கில் சாட்சி சொன்ன மனைவி கழுத்தறுத்து படுகொலை

மனைவி மீது சந்தேகப்பட்டு 3 குழந்தைகளை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட வாலிபர்

 
   
   
 
 
   
   
 
 
   
   
 
28 ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: தாமோதரம்பிள்ளை சேதுப்பிள்ளை குடும்பத்தினர்
பிறந்த இடம்: நெடுந்தீவு மேற்கு
வாழ்ந்த இடம்: திருகோணமலை
பிரசுரித்த திகதி: 23 மே 2013
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: மதுரநாயகம் பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
காந்தி தாத்தா ரத்தம் ஏலமா? என் ரத்தம் கொதிக்கிறது: கொள்ளுப்பேரன் வேதனை
[ புதன்கிழமை, 22 மே 2013, 07:39.26 AM ]
மகாத்மா காந்தியின் ரத்தம் தோய்ந்த பொருட்கள் ஏலம் விடப்படுவதை தடுக்க முடியவில்லையே என அவரது கொள்ளுப்பேரன் துஷார் காந்தி வேதனை தெரிவித்துள்ளார். [மேலும்]
இந்தியாவிடமிருந்து மின்சாரம் வாங்கும் திட்டத்தில் பாகிஸ்தான்
[ புதன்கிழமை, 22 மே 2013, 07:35.31 AM ]
கடும் மின் தட்டுப்பாடால் அவதிப்பட்டு வரும் பாகிஸ்தான், இந்தியாவிடமிருந்து 1000 மெகா வாட் மின்சாரம் வாங்கும் திட்டத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது. [மேலும்]
சூதாட்ட தலைவன் பிரசாந்துக்கும் அரசியல் பிரமுகர்களுக்கும் தொடர்பு
[ புதன்கிழமை, 22 மே 2013, 06:59.14 AM ]
ஐ.பி.எல். சூதாட்டம் தொடர்பாக டெல்லி போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் உள்ளிட்ட 3 ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர்கள் சிக்கினர். [மேலும்]
எந்த தப்பும் செய்யவில்லை-நான் நிரபராதி: ஸ்ரீசாந்த்
[ புதன்கிழமை, 22 மே 2013, 06:24.26 AM ]
ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்ட குற்றத்திற்காக ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்கள் ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கித் சவான் உட்பட 18 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர். [மேலும்]
7 வயது சிறுமியை கற்பழித்து கொடூரமாக கொன்ற உடன்பிறவா அண்ணன்
[ புதன்கிழமை, 22 மே 2013, 06:16.51 AM ]
மத்திய பிரதேசத்தில் 7வது சிறுமியை அவரது உடன்பிறவா அண்ணன் கடத்திச் சென்று, கற்பழித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]