இந்தியச் செய்தி
துணை ஜனாதிபதி தேர்தல்: அன்சாரி அமோக வெற்றி
[ செவ்வாய்க்கிழமை, 07 ஓகஸ்ட் 2012, 01:41.43 PM GMT +05:30 ]
இந்தியாவின் 14வது துணை ஜனாதிபதியாக ஹமீது அன்சாரி மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய துணை ஜனாதிபதி தேர்தல் இன்று நடைபெற்றது. இந்தத் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் ஹமீத் அன்சாரியும், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ஜஸ்வந்த் சிங்கும் போட்டியிட்டனர்.

இன்று காலை நடந்த வாக்களிப்பில் தலைவர்கள் உள்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

இதன் வாக்கு எண்ணிக்கை இன்று மாலை நடந்தது. பதிவான 736 வாக்குகளில் 490 வாக்குகளைப் பெற்று அன்சாரி வெற்றி பெற்றார்.

ஹமீது அன்சாரி

நாட்டின் துணை ஜனாதிபதியாக 2வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஹமீத் அன்சாரி சிறந்த கல்வியாளராக, எழுத்தாளராக பன்முகத் திறமை கொண்டவர்.

உத்தரப்பிரதேசத்தில் உள்ள காசிப்பூர் தான் சொந்த ஊர். ஆனால் இவர் பிறந்தது கொல்கத்தாவில்.

1961ஆம் ஆண்டில் இந்திய சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று வெளியுறவுத் துறையில் பணியில் சேர்ந்தார்.

அவுஸ்திரேலியாவிற்கான இந்திய தூதர், ஐக்கிய அரபு நாடுகள், ஆப்கானிஸ்தான், ஈரான், சவூதி அரேபியா போன்ற நாடுகளுக்கான இந்திய தூதர் ஆகிய பொறுப்புகளை வகித்தவர் அன்சாரி. ஐக்கிய நாடுகள் சபைக்கான நிரந்த பிரதிநிதியாகவும் இருந்தார்.

1984ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்றார். மேலும் அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் 2000ஆம் ஆண்டு மே மாதம் முதல் 2002ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை துணை வேந்தராகப் பணியாற்றினார்.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், ஜாமியாமில்லா இஸ்லாமிய பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கௌரவ பேராசிரியராகவும் பணியாற்றினார். தேசிய சிறுபான்மை ஆணையத்தின் தலைவராகவும் இருந்தவர்.

மேற்காசிய விவகாரங்களில் மிகுந்த ஆர்வமுடைய அன்சாரி, பாலஸ்தீனம் உட்பட பல்வேறு மேற்காசிய நாடுகளின் வெளியுறவு விவகாரங்கள் குறித்துப் புத்தகங்கள் எழுதியுள்ளார்.

ஊழலுக்கு எதிரான லோக்பால் சட்ட முன்வரைவு மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட போது, அதன் மீதான விவாதத்தை நள்ளிரவு வரை நீட்டித்து, பின் வாக்கெடுப்பு நடத்தாமலேயே அவையைக் கால வரையின்றி ஒத்திவைத்தார் அன்சாரி.

இதற்காகத்தான் ஹமீத் அன்சாரியை மீண்டும் துணை ஜனாதிபதியாக தெரிவு செய்து இருப்பதாக கூறப்படுவதும் உண்டு.

கடந்த 2007ஆம் ஆண்டு துணை ஜனாதிபதி தேர்தலின் போது மொத்தம் 455 வாக்குகளைப் பெற்றிருந்தார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட நஜ்மா ஹெப்துல்லாவை விட 233 வாக்குகள் வித்தியாசதில் ஹமீத் அன்சாரி வெற்றி பெற்றார்.

Print Send Feedback
One moment please..
 
 
   
   
   
   
   
 
பிந்திய 10 செய்திகள்

கர்நாடகாவில் நடிகர் அம்பரீஷ், நடிகை உமாஸ்ரீ உட்பட 28 அமைச்சர்கள் இன்று பதவியேற்பு

சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு! 20 லிட்டர் தண்ணீர் ரூ.200: மக்கள் அவதி

ஹம்மர் காரை உதயநிதியிடம் ஒப்படைத்தது சிபிஐ

கத்தி முனையில் சிறுமி பாலியல் பலாத்காரம்: வாலிபர்களுக்கு வலைவீச்சு

பஸ்ஸிலிருந்து பண மழை பெய்த அதிசயம்: பணம் பொறுக்குவதில் மக்களிடையே மோதல்

சிறையில் தூக்கமில்லாமல் தவித்த சஞ்சய் தத்

பவர் ஸ்டாரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

மன்மோகன் சிங்கிற்கு ஒபாமா அழைப்பு

சட்ட விரோதமாக இறக்குமதி செய்த உதயநிதி ஸ்டாலினின் ஹம்மர் கார் சி.பி.ஐ.யிடம் ஒப்படைப்பு

ஜம்மு சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் சிம் கார்டுகள் கண்டுபிடிப்பு

 
   
   
 
 
   
   
 
 
   
   
 
மரண அறிவித்தல்
பெயர்: தவராசா பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
அகாலமரணம்
பெயர்: வயிரமுத்து தியாகராசா
பிறந்த இடம்: மன்னார் ஆத்திமோட்டை
வாழ்ந்த இடம்: இலண்டன்
பிரசுரித்த திகதி: 11 ஏப்ரல் 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றிநவிலலும்
பெயர்: இராசபூவதி மாணிக்கவாசகர்
பிறந்த இடம்: சாவகச்சேரி
வாழ்ந்த இடம்: மல்லாகம், வெள்ளவத்தை
பிரசுரித்த திகதி: 14 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
முதன் முறையாக திருநங்கைக்கு அரசு பணி
[ வியாழக்கிழமை, 16 மே 2013, 06:05.57 AM ]
தமிழகத்தில் முதன் முறையாக திருநங்கை ஒருவருக்கு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பணி வழங்கப்பட்டுள்ளது. [மேலும்]
கையில் ஒரு பைசா கூட இல்லை! மாருதி கார் மட்டுமே சொந்தம்: மன்மோகன் சிங்
[ வியாழக்கிழமை, 16 மே 2013, 05:45.34 AM ]
இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தற்போதைய நிலையில் கைவசம் எந்தவொரு பணமும் இல்லையாம். [மேலும்]
இணையத்தில் பிரபல நடிகையின் நிர்வாண படங்களை வெளியிட்ட நபர் கைது
[ வியாழக்கிழமை, 16 மே 2013, 05:39.34 AM ]
பிரபல மலையாள நடிகை அஞ்சு அரவிந்தின் ஆபாச படங்களை இணையத்தளத்தில் வெளியிட்ட நபர் கைது செய்யப்பட்டார். [மேலும்]
ஓடும் பேருந்தில் மாணவி கற்பழிப்பு: முக்கிய குற்றவாளிக்கு விஷம் கொடுக்கப்பட்டதா?
[ வியாழக்கிழமை, 16 மே 2013, 05:30.12 AM ]
டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. [மேலும்]
டாக்டர் ராமதாஸுக்கு அவசர இதய அறுவை சிகிச்சை
[ வியாழக்கிழமை, 16 மே 2013, 04:12.22 AM ]
பாமக கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கு அவசர இதய அறுவை சிகிச்சை செய்யப்பட இருப்பதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். [மேலும்]