ஹரியானா மாநிலம் பானிபட்டை சேர்ந்த கிஷன் சந்த்(வயது 80), கடந்த 7 மாதங்களுக்கு முன்பு வர்த்தகம் தொடர்பாக திருவனந்தபுரம் வந்தார்.
அப்போது அவர் பல லொத்தரி சீட்டுகளை வாங்கியுள்ளார். அதில், ஒரு சீட்டில் ரூ. 1 கோடி பரிசுத்தொகையாக விழுந்தது.
இந்த தொகையை நிறுவனத்திடம் சென்று கேட்டு வந்தபோதிலும் அவருக்கு பரிசுத்தொகை வழங்கப்படவில்லை.
இதுகுறித்து, தான் காந்திய வழியில் போராடி வருவதாக கிஷன் சந்த் கூறியுள்ளார்.
ஆனால் கேரள மாநிலத்தில் வசிப்பவர்களுக்கு மட்டுமே பரிசுத்தொகை வழங்கப்படும் என்று அரசின் கொள்கையே இருக்கும்போது ஹரியானா மாநிலத்தை சேர்ந்த ஒருவருக்கு எவ்வாறு பரிசுத்தொகை வழங்க முடியும் என்று லொத்தரி விற்பனை நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |