இந்தியச் செய்தி
நில அபகரிப்பு வழக்கிற்கு முதன் முறையாக சிறைதண்டனை
[ வெள்ளிக்கிழமை, 19 ஏப்ரல் 2013, 08:15.37 AM GMT +05:30 ]
நில அபகரிப்பு தொடர்பான வழக்கில் முதல் முறையாக தமிழகத்தில் தர்மபுரி மாவட்டத்தில் 2 பேருக்கு 1 ஆண்டு மற்றும் 1 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்ற உடன் ஏராளமான நில அபகரிப்பு வழக்குகள் புற்றீசல் போல் பெருக தொடங்கின. பொலிசாரும் வழக்குப் பதிவு செய்து பல்லாயிரம் ஏக்கர் நிலத்தை மீட்டனர். பல வழக்குகளில் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு நீதிமன்ற விசாரணையும் நடைபெற்று வருகிறது.

இதே போன்ற ஒரு வழக்குதான் தர்மபுரி மாவட்டம் மாரண்ட அள்ளியை சேர்ந்த சைலேந்தர் என்பவர் தொடுத்தார். சைலேந்தரும் அவரது தம்பி சிவக்குமாரும் கொண்டேன் அள்ளி கிராமத்தில் 3 ஏக்கர் 7 சென்ட் நிலத்தை கடந்த 2006-ம் ஆண்டு அதே ஊரைச் சேர்ந்த சிவஞானம் என்பவரிடம் இருந்து ரூ. 1 லட்சத்து 52 ஆயிரத்திற்கு விலைக்கு வாங்கி அந்த நிலத்தில் விவசாயம் செய்து வந்தனர்.

இந்நிலையில் அவர்களின் பக்கத்து நிலத்துக்காரர்களான ஆனந்தன், அவருடைய சகோதரர் பெருமாள் ஆகியோர் அந்த நிலத்தை குறைந்த விலைக்கு கேட்டு அடிக்கடி மிரட்டி வந்தனர். கடந்த 14.8.2011 அன்று சைலேந்தர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்திற்கு சென்றார். அப்போது ஆனந்த், பெருமாள் ஆகியோர் ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்து கொலை மிரட்டல் விடுத்தனர்.

இது தொடர்பாக சைலேந்தர் தர்மபுரி நில ஆக்கிரமிப்பு தடுப்பு பிரிவில் புகார் செய்தார். இதுதொடர்பாக பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இந்த வழக்கு விசாரணையின் முடிவில் ஆனந்த், பெருமாள் ஆகிய 2 பேருக்கும் 2 பிரிவுகளில் ஒரு ஆண்டு மற்றும் ஒரு மாத சிறை தண்டனை விதித்து முதன்மை குற்றவியல் நடுவர் குணசேகரன் தீர்ப்பு அளித்தார்.

இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிடப்பட்டது. தமிழகத்தில் நில அபகரிப்பு வழக்கில் முதல் முறையாக 2 பேருக்கு தண்டனை கிடைத்திருப்பது தர்மபுரியில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Print Send Feedback
One moment please..
 
 
   
   
   
   
   
 
பிந்திய 10 செய்திகள்

என்னை தோல்வியடைய வைத்தால் தற்கொலை செய்து கொள்வேன்: விடைத்தாளில் மிரட்டிய மாணவி

இந்த வாரம் உங்களுக்கு கிடைக்கப்போவது என்ன?

நிலநடுக்கத்தை டி.வி. சீரியல்கள் போல் படம் பிடிப்பதா? இந்திய ஊடகங்களை விளாசிய நேபாள நெட்டிசன்கள்

நள்ளிரவில் உல்லாச விடுதியில் ஆட்டம் போட்ட பெண்கள்: 48 பேர் கைது

ஆட்டோ ஓட்டுனரை மணந்த கனடிய பெண்னை தாயே கொன்ற வழக்கு: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

திருப்பதியில் இருந்து சென்னை வந்த பேருந்து கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி

மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கக்கூடிய புதிய விதிகளை ரத்து செய்யவேண்டும்: முதல்வர் கடிதம்

சவுதி அரேபியாவுக்கு வேலைக்கு சென்ற பொறியாளர் திடீர் மாயம்: மகனை மீட்க போராடும் தந்தை

ஆந்திர கிராம மக்கள் வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்திய பிரான்ஸ் பெண்மணி

பணத்தை கூட எண்ணத் தெரியாதா? மணமேடையை விட்டு மணமகனை விரட்டிய புதுமைப்பெண்

 
   
   
 
 
   
   
 
 
   
   
 
1ம் ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: ஐயாத்துரை துரைசிங்கம்
பிறந்த இடம்: யாழ். வல்வெட்டித்துறை
வாழ்ந்த இடம்: பருத்தித்துறை, நியூசிலாந்து
பிரசுரித்த திகதி: 3 மே 2015
அகாலமரணம்
பெயர்: கிருஸ்ணசாமி சிவச்சந்திரன்
பிறந்த இடம்: யாழ். சுழிபுரம் கிழக்கு
வாழ்ந்த இடம்: பிரான்ஸ்
பிரசுரித்த திகதி: 24 ஏப்ரல் 2015
மரண அறிவித்தல்
பெயர்: ஆதிநாயகம் நமசிவாயம்
பிறந்த இடம்: மட்டக்களப்பு
வாழ்ந்த இடம்: களுவாஞ்சிக்குடி, கனடா
பிரசுரித்த திகதி: 28 ஏப்ரல் 2015
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
காதலுக்கு எதிர்ப்பு! பெற்றோர் உட்பட 7 பேரை கொலை செய்த பெண்ணுக்கு மரணதண்டனை
[ சனிக்கிழமை, 02 மே 2015, 01:04.57 PM ]
தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர் உட்பட குடும்பத்தினர் 7 பேரை கொலை செய்த பெண்ணுக்கு மரணதண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. [மேலும்]
ஒரு கப் பருப்பு குழம்பை வைத்து இரண்டு ரொட்டி சாப்பிட முடியுமா? புகார் செய்த நபர்
[ சனிக்கிழமை, 02 மே 2015, 01:01.28 PM ]
சென்னையில் நபர் ஒருவர் ரொட்டிக்கு குழம்பு தரவில்லை என ஹொட்டல் மீது புகார் அளித்துள்ளார். [மேலும்]
பாகிஸ்தானை எச்சரிக்கும் இந்தியா
[ சனிக்கிழமை, 02 மே 2015, 12:02.17 PM ]
இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிடுவதை பாகிஸ்தான் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். [மேலும்]
நடிகையிடம் சில்மிஷம் செய்த சிறுவன்: ஹொட்டல் அறையில் நடந்தது என்ன?
[ சனிக்கிழமை, 02 மே 2015, 06:13.44 AM ] []
பிரபல இந்தி நடிகையை, சிறுவன் ஒருவன் கற்பழிக்க முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
ஜெயலலிதா வெளியே வரக்கூடாது என பூஜை…உலகமகா நடிப்புடா சாமி: இளங்கோவன்
[ சனிக்கிழமை, 02 மே 2015, 05:54.41 AM ] []
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியே வரக்கூடாது என்று தமிழக அமைச்சர்கள் பூஜை செய்கிறார்கள் என காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார். [மேலும்]