இந்தியச் செய்தி
உலகின் செல்வாக்கு படைத்தவர் பட்டியலில் நடிகர் அமீர் கான்: டைம் இதழ்
[ வெள்ளிக்கிழமை, 19 ஏப்ரல் 2013, 08:52.05 AM GMT +05:30 ]
டைம் இதழ் வெளியிட்டுள்ள உலகின் செல்வாக்கு படைத்தோரின் 100 பேர் கொண்ட பட்டியலில் நமது மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், நடிகர் அமீர் கான் மற்றும் பாகிஸ்தான் சிறுமி மலாலா போன்றோர் இடம் பெற்றுள்ளனர்.

நியூயார்க்கில் இருந்து வெளிவரும் ‘டைம்’ இதழ் ஆண்டுதோறும் அரசியல், கலை, சமூகம் உள்ளிட்ட துறைகளில் செல்வாக்கு மிகுந்த 100 பேர் பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் மத்திய நிதியமைச்சரும் தமிழக அரசியல் தலைவர்களுள் ஒருவருமான ப.சிதம்பரம், இந்தி நடிகரும் சமூக ஆர்வலருமான அமீர் கான் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். ப.சிதம்பரம் குறித்தான்ன அறிமுகக் கட்டுரையில், அவரது அரசியல் மற்றும் நிதி நிர்வாகம் சார்ந்த நடவடிக்கைகள் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் டைமின் கவர் ஃபோட்டோவில் இடம் பெற்றுள்ள அமீர் கானின் சிறப்புகள் குறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அமீர் கான் தனது ‘சத்யமேவ ஜெயதே’ சமூக விழிப்பு உணர்வு நிகழ்ச்சி மூலம் உலக அளவில் கவனத்தை ஈர்த்ததை ‘டைம்’ சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள மற்றொரு இந்தியர் – சமூக ஆர்வலர் விருந்தா குரோவர் (வழக்கறிஞரான இவர், டெல்லி பாலியல் பலாத்கார சம்பவத்தில் நீதிக்காக குரல் கொடுத்தவரில் முக்கியமானவர்), இந்திய வம்சாவளி கலிஃபோர்னியாவின் அடார்னி ஜெனரல் கமலா ஹாரிஸ் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

தற்போது ‘டைம்’ இதழ் வெளியிட்டுள்ள உலகின் செல்வாக்கு மிகுந்த 100 பேர் பட்டியலில் பாகிஸ்தான் சிறுமி மலாலாவும் இடம்பெற்றுள்ளார். அதுவும், கவர் ஃபோட்டோக்களில் கெளரவப்படுத்தப்பட்டுள்ளார்.பெண் கல்விக்காக குரல் கொடுத்து வருவதற்காக, தாலிபான்களால் சுடப்பட்ட மலாலா இப்போது முழு குணமடைந்து, இங்கிலாந்தின் பெர்மிங்ஹாம் நகரில் பள்ளிப் படிப்பைத் தொடர்ந்துள்ளார்.

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, அவரது மனைவி மிஷேல், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன், மியான்மரின் ஜனநாயகத் தலைவர் ஆங் சான் சூகி, நடிகை ஜெனீஃபர் லாரன்ஸ், இயக்குனர் ஸ்டீஃபன் ஸ்பீல்பெர்க் உள்ளிட்டோரும் இந்தப் பட்டியலில் உள்ளனர்.

Print Send Feedback
One moment please..
 
 
   
   
   
   
   
 
பிந்திய 10 செய்திகள்

திருமண நாளன்று காதலியை கைவிட்டுவிட்டு வேறு பெண்ணுடன் ஓடிய காதலன்: பொலிசார் அதிரடி

இந்தியாவின் அதிநவீன பிரம்மாண்ட போர்க் கப்பல் ஐஎன்எஸ் விசாகப்பட்டணம் (வீடியோ இணைப்பு)

திடீரென வீட்டு தரையில் பயங்கர வெப்பம்: அதிர்ச்சியில் உறைந்த நபர்

மின்விசிறிகளில் மறைத்து வைக்கப்பட்ட நகைகள்: மோப்பம் பிடித்து திருடிச் சென்ற திருடர்கள்

ஜெயலலிதா வழக்கில் எனக்கு தனிப்பட்ட விருப்பமில்லை: பவானிசிங் அதிரடி பேட்டி

அன்பார்ந்த ராசி நேயர்களே..இந்த வாரம் உங்களுக்கு என்ன நடக்கும்?

அமெரிக்காவில் சாதனைகளால் கலக்கும் 17 வயது இந்திய வம்சாவளி மாணவி

நட்சத்திர ஹொட்டல் பார்களில் பெருமளவில் குவியும் இளம்பெண்கள்: அதிர்ச்சி தகவல்

ஓரினச்சேர்க்கை கணவரின் கொடுமை தாங்க முடியவில்லை: தற்கொலை செய்துகொண்ட பெண் மருத்துவர் (வீடியோ இணைப்பு)

உடல்நலத்தை பாதிக்கும் மின் கழிவுகளை உருவாக்கும் பட்டியலில் 5வது இடத்தில் இந்தியா

 
   
   
 
 
   
   
 
 
   
   
 
மரண அறிவித்தல்
பெயர்: கருணாநந்தசிவம் தனலட்சுமி
பிறந்த இடம்: யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்: நீர்கொழும்பு
பிரசுரித்த திகதி: 19 ஏப்ரல் 2015
மரண அறிவித்தல்
பெயர்: அந்தோனிப்பிள்ளை செல்லையா ஜோக்கிம்
பிறந்த இடம்: யாழ். அல்லைப்பிட்டி
வாழ்ந்த இடம்: வவுனியா
பிரசுரித்த திகதி: 17 ஏப்ரல் 2015
மரண அறிவித்தல்
பெயர்: செல்வநாயகம் நவம்
பிறந்த இடம்: யாழ். மாதகல்
வாழ்ந்த இடம்: யாழ். குருநகர், நோர்வே Oslo
பிரசுரித்த திகதி: 14 ஏப்ரல் 2015
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
இந்தியாவின் தேசிய விலங்கு: புலிக்கு பதில் சிங்கமா?
[ ஞாயிற்றுக்கிழமை, 19 ஏப்ரல் 2015, 05:26.17 AM ]
இந்தியாவின் தேசிய விலங்காக சிங்கத்தை அறிவிப்பது குறித்து மத்திய அரசு ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. [மேலும்]
கழுத்து நிற்காமல் அவதிப்படும் சிறுவன்..இதற்கு இவன் இறந்தே விடலாம்: கதறும் பெற்றோர் (வீடியோ இணைப்பு)
[ சனிக்கிழமை, 18 ஏப்ரல் 2015, 12:30.37 PM ] []
மத்தியப்பிரதேசத்தில் பிறவியிலேயே முதுகெலும்பு பாதிப்புடன் பிறந்த சிறுவன் ஒருவனின் தலை, 180 டிகிரி கோணத்தில் தொங்கிய நிலையிலேயே காணப்படுகிறது. [மேலும்]
காட்டு யானை இருமுறை புரட்டியெடுத்தும் உயிர்தப்பிய அதிஷ்டசாலி (வீடியோ இணைப்பு)
[ சனிக்கிழமை, 18 ஏப்ரல் 2015, 11:39.44 AM ]
மேற்குவங்க மாநிலத்தில் ஊருக்குள் புகுந்த காட்டு யானையால் பலமாக தாக்கப்பட்டும் நபர் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். [மேலும்]
தவறி விழுந்து பலியான இளைஞர்: ரயிலுக்கு தீ வைத்த கிராம மக்கள்
[ சனிக்கிழமை, 18 ஏப்ரல் 2015, 11:07.40 AM ] []
ஒடிஷாவில் இளைஞர் ஒருவர் ரயிலில் இருந்து இறங்கும் போது தவறி விழுந்து பலியானதால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் ரயிலுக்கு தீ வைத்து எரித்துள்ளனர். [மேலும்]
பின்வாசல் வழியாக மறைந்தோடிய பிரபல நடிகை: காரணம் என்ன?
[ சனிக்கிழமை, 18 ஏப்ரல் 2015, 10:39.29 AM ] []
நடிகை அம்பிகா பொலிஸ் கமிஷ்னரை சந்தித்து விட்டு, நிருபர்களை தவிர்க்க பொலிஸ் நிலையத்தின் பின்வாசல் வழியாக சென்றுள்ளார். [மேலும்]