தமிழ்நாட்டுச் செய்தி
வடை என நினைத்து நகைப்பொட்டலத்தை தூக்கி சென்ற காகத்தை விரட்டி பிடித்தனர் மக்கள்
[ செவ்வாய்க்கிழமை, 17 ஏப்ரல் 2012, 12:17.42 PM GMT +05:30 ]
கன்னியாகுமரி மாவட்டத்தில் 5 பவுன் தங்க நகை பொட்டலத்தை தூக்கிச் சென்ற காகத்தை 200 மீற்றர் வரை துரத்திச் சென்று நகையை மீட்ட சம்பவம் அப்பகுதியில் நகைச்சுவையை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியைச் சேர்ந்த தமிழ் ராணி, தனது உறவினர் ஒருவருக்கு கொடுக்க 1 நெக்லஸ், 1 பிரேஸ்லெட், 3 கம்மல் என 5 பவுன் தங்க நகைகளை ஒரு காகிதத்தில் வைத்து பொட்டலம் கட்டினார். அப்போது மாடியில் காயப்போட்ட துணிகளை எடுக்கச் சென்றார்.

கையோடு அந்த நகை பொட்டலத்தையும் எடுத்துச் சென்று மாடி சுவற்றி்ல் வைத்து விட்டு துணிகளை எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த காகம் ஒன்று நகை பொட்டலத்தை உணவுப் பொட்டலம் என்று நினைத்து தூக்கிச் சென்றது.

இதைப் பார்த்த அவர் கூச்சலிட்டு அக்கம் பக்கத்தினரை அழைத்தார். வந்தவர்கள் விபரமறிந்து அந்த காகத்தை துரத்தினர்.

சுமார் 200 மீற்றர் வரை பறந்த காகம் ஒரு ஓட்டு வீட்டுக் கூரையில் அமர்ந்தது. உடனே துரத்திச் சென்றவர்கள் கையில் கிடைத்தவற்றால் காகத்தை விரட்டினர். இதைப் பார்த்த அந்த காகம் பொட்டலத்தை போட்டு விட்டு இடத்தை காலி செய்தது.

அவர்கள் பொட்டலத்தை எடுத்து தமிழ் ராணியிடம் கொடுத்தனர். தமிழ்ராணி நகைகள் கிடைத்த சந்தோசத்தில் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

Print Send Feedback
One moment please..
 
 
   
   
   
   
   
 
பிந்திய 10 செய்திகள்

திருமணம் செய்யாவிட்டால் கொன்று விடுவேன்: நடிகையை மிரட்டிய தயாரிப்பாளர் கைது

மன உளைச்சலே மணிவண்ணனின் மரணத்திற்கு காரணம்: சீமான்

சென்னையில் மலிவு விலை காய்கறி கடைகள்: நாளை முதலமைச்சர் திறந்து வைக்கிறார்

மும்பை தாக்குதலை திட்டமிட்டு நடத்தியவர்களுக்கு பாகிஸ்தான் நிதியுதவி

அமெரிக்க நீதிபதியாக இந்தியர் ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசன் நியமனம்

ஏடிஎம் இயந்திரத்தை தூக்கிச் சென்ற கொள்ளையர்கள்

புதுக்கோட்டை அருகே பயங்கரம்: 9 குழந்தைகள் துடிதுடித்து இறந்தனர்

திருமணம் ஆகாத ஆணும்- பெண்ணும் உறவு வைத்தால் சட்டப்படி செல்லும்: சென்னை நீதிமன்றம் அதிரடி

வட மாநிலங்களில் பேய் மழை: பலி எண்ணிக்கை 130ஆக உயர்வு

15 வயது சிறுமியை பலாத்காரம் செய்து இணையத்தில் வெளிட்ட பேஸ்புக் காதலன்

 
   
   
 
 
   
   
 
 
   
   
 
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டியும், நன்றி நவிலலும்.
பெயர்: ஆறுமுகம் அமிர்தலிங்கம்
பிறந்த இடம்: யாழ்.கரணவாய் கிழக்கு
வாழ்ந்த இடம்: கனடா Markham
பிரசுரித்த திகதி: 17 யூன் 2013
அகாலமரணம்
பெயர்: வீரபாகு விக்கினேஸ்வரன்
பிறந்த இடம்: கரவெட்டி
வாழ்ந்த இடம்: பிரான்ஸ்
பிரசுரித்த திகதி: 12 யூன் 2013
மரண அறிவித்தல்
பெயர்: ஞானச்சந்திரன் ஞனோசன்
பிறந்த இடம்: ஜேர்மனி
வாழ்ந்த இடம்: ஜேர்மனி
பிரசுரித்த திகதி: 14 யூன் 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்தாரா ஷாருக்?
[ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 10:20.42 AM ]
மகாராஷ்டிரா மாநில கதிரியக்கவியல் நிபுணர்கள் சங்கத்தின் சார்பில், பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மீது மாநில சுகாதாரத் துறை அமைச்சரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
வெள்ளத்தில் சிக்கிய முதல்வர் 60 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு
[ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 09:48.53 AM ] []
வெள்ளத்தில் சிக்கிய இமாச்சல பிரதேச முதல்வர் வீரபத்திரசிங் 60 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்டார். [மேலும்]
துணி காய போடும் போது ஏற்பட்ட விபரீதம்: மின்சாரம் தாக்கி தாய், மகள் பலி
[ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 08:38.58 AM ]
துணி காய போடும் கம்பியில் மின்சாரம் பாய்ந்து தாயும், மகளும் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. [மேலும்]
ஜியா கான் தற்கொலைக்கு முன் எழுதிய கடிதம் பொய்யானதா? பொலிசார் திடுக்கிடும் தகவல்
[ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 06:23.55 AM ]
சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட பாலிவுட் நடிகை ஜியா கான் எழுதிய கடிதம் பொய்யானதாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. [மேலும்]
மனைவியின் ஆபாச படங்களை இணையத்தில் பரப்பி வன்மம் தீர்த்த கணவன்
[ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 02:40.38 AM ]
பெங்களூரை சேர்ந்த நந்தகுமார் என்ற வாலிபர், ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த இளம்பெண்ணை இணையத்தின் மூலம் நட்புறவாகி பின் திருமணம் செய்துக்கொண்டார். [மேலும்]