நேற்று முத்துவிடம் உனது மனைவியின் நடத்தை சரியில்லை என்று கலா என்பவர் கூறியுள்ளார்.
இந்த விடயத்தை தன் மனைவியிடம் விசாரிக்க இருவருக்கும் மத்தியில் வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை வந்தது.
சண்டையின் போது கோபத்தின் உச்சிக்கு சென்ற முத்து, கத்தியால் மனைவி முருகேஸ்வரி கழுத்தை அறுத்தார்.
உடனே அவர் முத்துவை கீழே தள்ளிவிட்டு கூச்சல் போட்டார். இவருடைய கூச்சல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்த மகள் பிரவீணா அழுது கொண்டே ஓடி வர அவளது கழுத்தையும் முத்து கத்தியால் கீறினார்.
பின்னர் அக்கம் பக்கத்தினர் இவர்களை காப்பாற்ற ஓடி வரும் போது முத்துவும் தன்னைத் தானே கத்தியால் வயிற்றில் குத்திக்கொண்டார்.
இதையடுத்து உயிருக்கு போராடிய 3 பேரையும் அப்பகுதியினர் திருச்சி அரசு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து திருவெறும்பூர் பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

|