தமிழ்நாட்டுச் செய்தி
திருமணம் ஆன 40நாளில் தூக்கில் தொங்கிய தம்பதிகள்
[ திங்கட்கிழமை, 23 ஏப்ரல் 2012, 07:01.07 AM GMT +05:30 ]
தென்காசி அருகே திருமணமான 40 நாளில் புதுமண தம்பதியினர் தூக்கில் தொங்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்த பண்பொழி அருகே உள்ள கரிசல் குடியிருப்பு பகுதி பஜனை மடத்தெருவைச் சேர்ந்தவர் காளி. அவருடைய மகன் தளவா (28). மும்பையில் உள்ள ஒரு மிட்டாய் கடையில் வேலை செய்தார். அவருக்கும் தென்காசி அருகே உள்ள தட்டான்குளத்தைச் சேர்ந்த முத்தையா மகள் மாரியம்மாளுக்கும்(20) கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பு கோலாகலமாகத் திருமணம் நடந்தது.

திருமணத்தையடுத்து அவர்கள் விருந்தினர்களின் வீடுகளுக்கு விருந்துக்கு சென்று வந்தனர். மேலும் மறுவீட்டுக்கும் சென்றனர். திருமணம் முடிந்ததில் இருந்து 40 நாட்களாக அவர்கள் உள்ளூரில் தான் இருந்தனர். அடுத்த வாரம் தம்பதியர் மும்பைக்கு செல்லவிருந்தனர். அவர்கள் பயணத்திற்கான ஏற்பாடுகளை உறவினர்கள் கவனித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மதிய உணவுக்குப் பிறகு அறைக்குள் சென்று கதவை உட்புறமாக அவர்கள் பூட்டிக் கொண்டனர். மாலையாகியும் கதவு திறக்கப்படவில்லை. அவர்கள் தூங்கிக் கொண்டிருக்கின்றனர் என்று உறவினர்கள் நினைத்தார்கள். ஆனால் வெகுநேரமாகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அவர்கள் கதவைத் தட்டினர். ஆனால் பதில் இல்லை. இதையடுத்து உறவினர்கள் இது குறித்து அச்சன்புதூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

பொலிசார் வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது தம்பதி தூக்கில் பிணமாகத் தொங்கினர். திருமணமான 40 நாளில் புதுமண தம்பதி தூக்கில் பிணமாகத் தொங்கியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Print Send Feedback
One moment please..
 
 
   
   
   
   
   
 
பிந்திய 10 செய்திகள்

ஐ.பி.எல். சூதாட்டத்திற்கு தண்டனை வழங்க புதிய சட்டம்..!

றொபேட் ஓ பிளேக்கின் பதவியைக் கைப்பற்றும் இந்திய வம்சாவளிப் பெண்

பத்திரிகை அலுவலகத்தில் மூவர் மர்ம நபர்களால் குத்திக்கொலை

மார்பக புற்று நோயை அறிந்து கொள்ளும் அதிநவீன கருவி அறிமுகம்

செங்குன்றம் : பரோலில் வந்த ஆயுள் கைதி வெட்டிக் கொலை

ஸ்ரீசாந்தை சூதாட்டத்தில் சிக்க வைத்த டிராவிட்

டாக்டருடன் ஏற்பட்ட கள்ளத் தொடர்பால் மனைவி வெட்டிக் கொலை

4 1/2 கோடி ரூபா வைரம் திருட்டு : மும்பை விமான நிலையத்தில் சம்பவம்..!

ஆற்று சுழலில் சிக்கி இரு இளையர்கள் பரிதாபமாக பலி

சி.பி.ஐ. ஊழல் குற்றச்சாட்டில் ஆந்திர மந்திரிகள் ராஜினாமா

 
   
   
 
 
   
   
 
 
   
   
 
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
அகாலமரணம்
பெயர்: ஜோதினி இராஜ்குமார்
பிறந்த இடம்: செட்டிகுளம்
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 14 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: தவராசா பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
“நான் சினிமாவுக்கு போகிறேன்”-டெல்லி மாணவி கடைசியாக சொன்னது: தாய் கண்ணீர் சாட்சியம்
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 07:13.05 AM ]
டெல்லியில் கடந்த வருடம் ஓடும் பஸ்சில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த மாணவியின் தாயார் முதன் முறையாக நீதிமன்றிற்கு வந்து சாட்சி சொல்லியுள்ளார். [மேலும்]
கல்லூரி மாணவரை கடத்தி ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டிய கும்பல் கைது
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 06:22.12 AM ]
கல்லூரி மாணவரை கடத்தி, 50 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். [மேலும்]
நட்புடன் பழகிய தோழிக்கு நடந்த விபரீதம்
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 05:27.16 AM ]
தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்த தோழியை, கத்தியால் குத்திய மாணவியை பொலிசார் கைது செய்தனர். [மேலும்]
பேச்சுத்திறனற்ற மாணவிகளுக்கு பாலியல் சித்ரவதை: பள்ளி நிர்வாகி கைது
[ சனிக்கிழமை, 18 மே 2013, 04:44.41 PM ]
ராஜஸ்தான் மாநிலம், காந்தி நகரில் இளம் சிறார்களுக்கான அரசு அனாதை இல்லம் உள்ளது. [மேலும்]
மனைவியை சந்தேகப்பட்டு கொடுமைப்படுத்திய கணவனுக்கு 10 ஆண்டு சிறை
[ சனிக்கிழமை, 18 மே 2013, 11:16.26 AM ]
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற 40 வயது பெண்ணை, அவரது உறவினர்கள் கடந்த ஆண்டு இந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். [மேலும்]