காங்கிரஸ் தலைமையிலான அரசு தனது அமைச்சரவையை மாற்றி அமைக்க முடிவு செய்துள்ளது.
வரும் வெள்ளிக்கிழமை நடக்கும் கூட்டத்தில் இதற்கான மாற்றங்கள் கொண்டுவரப்படுகிறது.
இதன்படி தமிழகத்தை சேர்ந்த ஜி.கே.வாசனிடம் இருந்து கப்பல் போக்குவரத்து பறிக்கப்படும். தி.மு.கவை சேர்ந்த ரகுமான்கானுக்கு சிறுபான்மை துறை வழங்கபடும்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு அமைச்சர் பொறுப்பும், மற்றும் மகாராஷட்டிர முதல்வர் ப்ரித்விராஜ் சவான், ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி, ஜோதிஆதித்யா சிந்தியா, சச்சின் பைலட், மனீஷ் திவாரி ஆகியோருக்கும் மத்திய அமைச்சர் பொறுப்பு வழங்கப்படும் என்றும் டெல்லி வட்டாரம் தெரிவிக்கிறது.
அதே நேரத்தில் மூத்த அமைச்சர்களாக அந்தோணி, சுஷீல்குமார்ஷிண்டே, எஸ். எம்.கிருஷ்ணா, ப.சிதம்பரம் ஆகியோர் பொறுப்பில் மாற்றம் இல்லை.
இதற்கிடையில் சமீப நாட்களாக மத்திய அமைச்சரவையில் ராகுல் காந்தியின் பேச்சு அதிகமாகவே காணப்படுகிறது.
பிரதமர் மன்மோகன் சிங், உத்தர பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் போன்றோர் ராகுலுக்கு மத்திய அமைச்சரவையில் பொறுப்பு வழங்கவேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது முக்கிய பதவிகளில் இருக்கும் வீரப்ப மொய்லி, சல்மான் குர்ஷித், குலாம்நபி ஆசாத், வயலார் ரவி, ஜெய்பால் ரெட்டி, சுபத்காத் சகாய், ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால், அகந்தா சங்மா, பெனி பிரசாத் வர்மா, ஜி.கே.வாசன் ஆகியோரிடம் இருந்து கூடுதல் பொறுப்புககள் பறிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. |