தமிழ்நாட்டுச் செய்தி
கள்ளக்காதலியை எரித்து கொன்றவர் 5 ஆண்டுகளுக்கு பின் கைது
[ வெள்ளிக்கிழமை, 18 சனவரி 2013, 11:07.44 AM GMT +05:30 ]
வேலூரில் கள்ளக்காதலியை எரித்து கொன்றவர் 5 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளார்.

வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் பஞ்சலிங்கேஸ்வரர் கோவில் பின்புறம், கடந்த 2008ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி பெண் ஒருவர் எரித்து கொலை செய்யப்பட்ட கட்டையாக கிடந்தார்.

இதனையடுத்து வழக்கு பதிவு செய்த காவேரிப்பாக்கம் பொலிசார், இதுகுறித்து விசாரணை நடத்தினர். அப்போது குறித்த பெண் காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலத்தை சேர்ந்த ஆறுமுகத்தின் மனைவி கலா(வயது 37) என்பது தெரியவந்தது.

கட்டிடத் தொழிலாளியான கலாவுக்கு சக தொழிலாளியான அதே பகுதியைச் சேர்ந்த ராஜா(வயது 42) என்பவருடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கடந்த 2008ம் ஆண்டு ஜனவரி மாதம் காவேரிப்பாக்கத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர்.

அப்போது கலாவின் நடவடிக்கைகள் சரியில்லாத காரணத்தினால், சந்தேகம் அடைந்த ராஜா கண்டித்துள்ளார். இருப்பினும் கலாவின் போக்கு மாறவில்லை.

இதற்கிடையே 18-5-2008 அன்று ராஜாவும், கலாவும் காவேரிப்பாக்கத்தில் உள்ள சினிமா தியேட்டருக்கு சென்று படம் பார்த்துள்ளனர். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த ராஜா கலாவை அடித்து காவேரிப்பாக்கம் பஞ்சலிங்கேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள கோபால் என்பவரின் நிலத்தில் அவரை எரித்துக் கொன்றார்.

கொலை நடந்து 5 ஆண்டுகள் கழித்து ராஜா தன் குற்றத்தை ஒப்புக்கொண்டு கொண்டபுரம் கிராம நிர்வாக அதிகாரி வேணுகோபாலிடம் சரண் அடைந்தார்.

அவர் இது குறித்து காவேரிப்பாக்கம் பொலிசாருக்கு தகவல் கொடுத்தார். பின்னர் பொலிசார் ராஜாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் காவலில் வைக்குமாறு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். அதன்படி அவர் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

Print Send Feedback
One moment please..
 
 
   
   
   
   
   
 
பிந்திய 10 செய்திகள்
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
அகாலமரணம்
பெயர்: ஸ்ரீகாந்தன் சண்முகலிங்கம்
பிறந்த இடம்: யாழ். அரியாலை
வாழ்ந்த இடம்: பிரான்ஸ்
பிரசுரித்த திகதி: 15 ஓகஸ்ட் 2014
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
இயற்கையின் மடியில் மக்கள்! சென்னையில் ஓர் அதிசய உணவகம் (ஸ்பெஷல் ரிப்போர்ட்)
[ செவ்வாய்க்கிழமை, 19 ஓகஸ்ட் 2014, 05:35.24 AM ] []
இந்தியாவின் முதுகெலும்பாக கருதப்பட்டு வரும் விவசாயத்திற்கு சுமார் 10,000 ஆண்டுகால வரலாறு இருப்பது நம்மில் பலருக்கு தெரிய வாய்ப்பில்லை. [மேலும்]
மது அருந்திவிட்டு அருள்வாக்கு சொல்லும் சித்தர் சாமி: அலைமோதும் மக்கள்
[ திங்கட்கிழமை, 18 ஓகஸ்ட் 2014, 01:37.50 PM ]
தூத்துக்குடியில், மக்களுக்கு மது அருந்திவிட்டு அருள்வாக்கு சொல்லும் சித்தர் சாமியை காண பொதுமக்கள் பலர் படையெடுத்த வண்ணம் உள்ளனர். [மேலும்]
பாம்புக்கடி போதையில் மிதந்த வாலிபன்
[ திங்கட்கிழமை, 18 ஓகஸ்ட் 2014, 01:02.08 PM ]
கேராளவில் போதைப் பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட நபர் ஒருவரை விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. [மேலும்]
தனியார் பள்ளி மாணவி கற்பழித்து கொலை: சென்னையில் பரபரப்பு
[ திங்கட்கிழமை, 18 ஓகஸ்ட் 2014, 10:21.36 AM ]
சென்னையில் பள்ளி மாணவி ஒருவர் கற்பழிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
கழிவறை இல்லை: பிறந்த வீட்டிற்கு படையெடுக்கும் பெண்கள்
[ திங்கட்கிழமை, 18 ஓகஸ்ட் 2014, 07:46.30 AM ]
உத்திரபிரதேசத்தில் உள்ள பெண்கள் சிலர் கணவர் வீட்டில் கழிப்பறை வசதி இல்லாததால் தாய் வீட்டுக்கே திரும்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]