இந்தியச் செய்தி
சிறைக்கைதியின் உலக சாதனை
[ சனிக்கிழமை, 19 சனவரி 2013, 05:40.03 AM GMT +05:30 ]
அகமதாபாத்தில் சிறையிலிருந்தபடியே அஞ்சல்வழி கல்வி மூலம் 31 பட்டங்கள் படித்து முடித்த மருத்துவர் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்தவர் பானு பட்டேல். எம்பிபிஎஸ் படித்துள்ள இவர் கடந்த 2004ம் ஆண்டு பெரா சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

கடந்த 2005ம் ஆண்டு இவருக்கு அகமதாபாத் பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றம் 6 ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.

இதை தொடர்ந்து அவர் சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டார். மருத்துவருக்கு படித்தவர் என்பதால் சிறையில் உள்ள கிளினிக்கில் இவர் வேலையில் அமர்த்தப்பட்டார்.

பின்னர் அங்கிருந்து சிறை லைப்ரரி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். இந்த கால கட்டத்தில் மருத்துவர் பாலாசாகிப் அம்பேத்கர் திறந்த வெளிபல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழி பட்டப்படிப்பில் சேர்ந்தார்.

கடந்த 2011ம் ஆண்டு டிசம்பர் மாதம் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். இந்த காலகட்டத்தில் எம்எஸ்சி, பிகாம், எம்காம் மற்றும் பட்டமேற்படிப்பு டிப்ளமோ என 31 பட்டங்களை வாங்கிக் குவித்தார்.

சிறையிலிருந்து விடுதலை ஆன பின்பு இவரது சாதனையை பாராட்டி அம்பேத்கர் பல்கலைக்கழகம் இவருக்கு ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கி கவுரவித்தது.

தற்போது இவர் மாநில சிறைகளில் உள்ள 26 தொலைதூர கல்வி மையங்களில் கைதிகளுக்கு வகுப்பு எடுத்துக் கொண்டிருக்கிறார்.

சிறையிலிருந்தபடியே 31 பட்டங்களை பெற்ற இவரது சாதனை உலக சாதனை புத்தகம் மற்றும் ஆசிய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

இதற்கான சான்றுகள் நேற்று அவருக்கு அளிக்கப்பட்டது. லிம்கா சாதனை புத்தகத்தின் 2013ம் ஆண்டுக்கான வெளியீட்டில் இவரது சாதனை இடம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Print Send Feedback
One moment please..
 
 
   
   
   
   
   
 
பிந்திய 10 செய்திகள்
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
6ம் ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: சின்னத்துரை லலிஸ் லாலினி
பிறந்த இடம்: யாழ். அரியாலை
வாழ்ந்த இடம்: பிரான்ஸ்
பிரசுரித்த திகதி: 22 யூலை 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: நந்தகுமார் கதிர்செல்வன்
பிறந்த இடம்: கிளிநொச்சி
வாழ்ந்த இடம்: கனடா
பிரசுரித்த திகதி: 17 யூலை 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: கணேசமூர்த்தி முத்தையா
பிறந்த இடம்: யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்: டென்மார்க் Arhus
பிரசுரித்த திகதி: 17 யூலை 2014
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
இறைவனை தேடும் அப்பாவி மக்கள்: சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானம்
[ ஞாயிற்றுக்கிழமை, 20 யூலை 2014, 12:52.51 PM ] []
மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு பாலிவுட் நடிகர்- நடிகைகள் தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ளனர். [மேலும்]
சீப்பான பல் மருத்துவம் வேணுமா..அப்போ இந்தியாவுக்கு வாங்க..
[ ஞாயிற்றுக்கிழமை, 20 யூலை 2014, 10:57.43 AM ] []
இந்தியாவின் தெருக்களில் நடந்து வரும் மலிவான பல் மருத்துவம் அனைவரையும் ஆச்சரியத்தில் அழ்த்தியுள்ளது. [மேலும்]
உண்மையான ’ஹீரோ’ இவரே...
[ ஞாயிற்றுக்கிழமை, 20 யூலை 2014, 08:17.37 AM ] []
கடந்த வாரத்தில் இந்தியாவில் நடந்த இனிமையான நிகழ்வுகள் உங்களுக்காக, [மேலும்]
பாட்டியின் முகத்தில் பெப்பர் ஸ்பிரே அடித்து செயினை பறித்த நடிகை
[ ஞாயிற்றுக்கிழமை, 20 யூலை 2014, 07:10.55 AM ] []
கேரளாவில் நடிகை ஒருவர், பாட்டியின் முகத்தில் பெப்பர் ஸ்பிரே அடித்துவிட்டு செயினை பறித்து சென்றுள்ளார். [மேலும்]
தோண்டி எடுக்கப்படும் உத்திரபிரதேச சிறுமிகளின் உடல்: சி.பி.ஐ அதிரடி
[ ஞாயிற்றுக்கிழமை, 20 யூலை 2014, 06:49.58 AM ] []
உத்திரபிரதேசத்தில் கற்பழித்துக் கொல்லப்பட்ட சிறுமிகளின் சடலத்தை மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய இன்று அவர்களின் உடல் தோண்டி எடுக்கப்படுகிறது. [மேலும்]