ஒவ்வொரு பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை அலகாபாத், ஹரித்வார், உஜ்ஜைன் மற்றும் நாசிக் ஆகிய நான்கு ஊர்களில் உள்ள ஆற்றுப் படுகையில் இவ்விழா நடைபெறுகின்றது.
குறிப்பாக அலகாபாத் கங்கை, யமுனை, கற்பனை நதியான சரஸ்வதி ஆகிய நதிகள் இணையும் திரிவேணி சங்கமத்தில் நடைபெறும் மகா கும்பமேளா என்ற விழா பிரசித்தி பெற்றது. இந்து மத நம்பிக்கைகளின்படி, சாகாவரம் தரக்கூடிய அமிர்தம் என்ற பானத்தின் துளிகள் வானில் கடவுள் திருமாலின் வாகனமான கருடன் சுமந்து சென்ற பானையிலிருந்து (கும்பம்) இந்த நான்கு இடங்களில் விழுந்ததாக ஐதீகம் சொல்லப்படுகின்றது.
இதனால் இந்த இடங்களில் கும்பமேளா நேரத்தில் நீராடுவது தங்கள் அக, புற அழுக்குகளை நீக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. இந்த ஆண்டு கடந்த 14ம் திகதி மகாசங்கராந்தி தினத்தன்று மட்டும் 1.1 கோடி போர் புனித நீராடியுள்ளனர்.





|