கோபால் கந்தாவின் விமான நிறுவனத்தில் கீதிகா சர்மா விமான பணிப்பெண்ணாக இருந்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 5 தேதி தற்கொலை செய்து கொண்ட இவர், தற்கொலைக்கு கோபால் கந்தா தான் காரணம் என கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த கடிதத்தை கைப்பற்றிய பொலிஸார் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதன் காரணமாக கடந்த சில நாட்களாக தலைமறைவானார் கண்டா.
இந்நிலையில் இன்று காலை சரணடைந்த அவரை பொலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோபால் காண்டா முன் பிணை கோரியிருந்தார். ஆனால் அவருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் பிணை வழங்க மறுத்து விட்டது.



|