நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு உட்பட பல பிரச்னைகள் காரணமாக, லோக்சபாவிற்கு முன்கூட்டியே தேர்தல் வருவதற்கான வாய்ப்பு இருப்பதாக அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர். இந்தச் சூழலில், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் முக்கியக் கட்சியான திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜியிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த மம்தா பானர்ஜி கூறுகையில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அதன் ஐந்தாண்டு பதவிக் காலத்தை நிறைவு செய்ய வேண்டும் என்பது தான் எங்களது விருப்பம். லோக்சபாவுக்கு முன்கூட்டியே தேர்தல் வருவதை நாங்கள் விரும்பவில்லை.
ஒரு வேளை லோக்சபாவிற்கு இடைத்தேர்தல் நடப்பதற்கான சூழல் உருவானால், அது சற்று சிரமமாகத்தான் இருக்கும். எப்படி இருந்தாலும் அரசியல் சூழலுக்கு ஏற்ப தேர்தலை சந்திக்க நாங்கள் தயாராகவே இருக்கிறோம் என மம்தா பானர்ஜி கூறியுள்ளார். |