தமிழ்நாட்டுச் செய்தி
மாநகராட்சிகளாக மாறிய தஞ்சாவூர் மற்றும் திண்டுக்கள்: முதல்வர் ஜெயலலிதா
[ புதன்கிழமை, 10 ஏப்ரல் 2013, 03:30.41 PM GMT +05:30 ]
முதல்வர் ஜெயலலிதா இன்று சட்டசபையில் தஞ்சாவூர் மற்றும் திண்டுக்கல் நகராட்சிகள் மாநகராட்சிகளாகத் தரம் உயர்த்தப்படும் என்று அறிவித்தார். சட்டசபையில் 110-வது விதியின் கீழ் ஜெயலலிதா ஒரு அறிக்கை வாசித்தார்.

அதில் கூறிப்பிடுகையில், திடக் கழிவிலிருந்து மின்சாரம் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் சேகரிக்கப்படும் திடக்கழிவுகளில் 40 முதல் 60 விழுக்காடு திடக்கழிவுகள் மக்கும் தன்மை உடையதாக உள்ளன.

அதிக அளவில் திடக் கழிவுகள் உற்பத்தியாகும் காய்கறி அங்காடிகள், உணவகங்கள், திருமணக் கூடங்கள், இறைச்சிக் கூடங்கள் ஆகியவற்றிலிருந்து கழிவுகளை தினசரி சேகரித்து அவற்றிலிருந்து உருவாகும் உயிரி எரிவாயு மூலம் மின் உற்பத்தி செய்யலாம்.

5 டன் எடை கொண்ட மக்கும் கழிவிலிருந்து நாளொன்றுக்கு 440 யூனிட்டுகள் மின் உற்பத்தி செய்வதன் மூலம் சுமார் 750 தெரு விளக்குகளை 12 மணி நேரம் ஒளிரச் செய்ய இயலும்.

எனவே, திடக் கழிவுகளிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்வதை ஊக்குவிக்கும் வகையில், 200 சதுர மீட்டர் பசுமை பகுதி உள்ளிட்ட 625 சதுர மீட்டர் பரப்பரளவில் திருச்சிராப்பள்ளி, திருப்பூர், ஈரோடு, சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய 5 மாநகராட்சிகளிலும், கும்பகோணம், பள்ளிப்பாளையம், ஓசூர், பூந்தமல்லி, காயல்பட்டினம், மேட்டூர், திருத்தணி, ஆவடி, காஞ்சிபுரம், கடலூர், பல்லவபுரம், திருவண்ணாமலை, கரூர், திருச்செங்கோடு, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திண்டுக்கல், உதகமண்டலம், ராஜபாளையம், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், கோபிச்செட்டிபாளையம், நாகர்கோவில் மற்றும் பழனி ஆகிய 24 நகராட்சிகளிலும் ரூ. 27 கோடி மதிப்பீட்டில் திடக் கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் நவீன உயிரி எரிவாயு கூடங்கள் அமைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவற்றிற்கெல்லாம் முத்தாய்ப்பாக, பெருகி வரும் மக்கள் தொகை, அதிகரித்து வரும் வருவாய், பணிகளின் தன்மை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, திண்டுக்கல் மற்றும் தஞ்சாவூர் ஆகிய இரு நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும்.

காரைக்குடி மற்றும் சிவகாசி நகராட்சிகள் தேர்வு நிலையிலிருந்து சிறப்பு நிலை நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும் என்பதையும் இந்த மாமன்றத்திற்கு மட்டற்ற மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். எனது தலைமையிலான அரசின் மேற்காணும் நடவடிக்கைகள் மூலம் நகர்ப்புற மக்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவேறவும், வாழ்க்கைத் தரம் மேம்படவும் வழிவகுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் ஜெயலலிதா.

Print Send Feedback
One moment please..
 
 
   
   
   
   
   
 
பிந்திய 10 செய்திகள்

திருமணத்திற்கு மறுத்த 16 வயது மாணவி: தீ வைத்து எரித்த தந்தை மற்றும் வளர்ப்பு தாய்

கருணாநிதியே போட்டியிட்டாலும் ஒரு கை பார்த்துவிட தயார்: அ.தி.மு.க.வில் மனுத்தாக்கல் செய்துள்ள உதவி ஆணையர்

ஜெயலலிதாவின் நடவடிக்கையால் சென்னை துறைமுகம் மூடப்படும் ஆபத்து: பாமக நிறுவனர் ராமதாஸ்

ஆதிகாலத்திலிருந்து அணையாமல் எரியும் ”ஜுவாலா ஜி”: தெய்வ சக்தியின் மகிமை? (வீடியோ இணைப்பு)

பாகிஸ்தான் பிரதமர் வீட்டில் தாவூத் இப்ராஹிமை சந்தித்துப் பேசிய மோடி?

ஈவ் டீசிங் செய்யும் ஆண்களை பெண்கள் திருப்பி அடிக்க வேண்டும்: நடிகை வித்யாபாலன்

சென்னையில் சுத்தமான காற்றை சுவாசிக்க வேண்டுமா? விலை ரூ.975

விஜயகாந்தின் டெல்லி பயணம் திடீர் ரத்து ஏன்...? திசை திரும்பும் தமிழக அரசியல்!

தமிழக பா.ஜ.க. தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் மீண்டும் தேர்வு

மதுரை அருகே அரசு பஸ் - லாரி மோதி கோர விபத்து

 
   
   
 
 
   
   
 
 
   
   
 
1ம் ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: நாகேசு வரதராஜசிங்கம்
பிறந்த இடம்: யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்: சுவிஸ், கிளி/ வட்டக்கச்சி
பிரசுரித்த திகதி: 7 பெப்ரவரி 2016
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
இடுப்பை வளைத்து பெல்லி நடனம் ஆடிய துணை ஜெயிலர்: வாட்ஸ்அப்பில் வெளியான வீடியோ
[ சனிக்கிழமை, 06 பெப்ரவரி 2016, 05:27.24 AM ] []
சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள மாவட்ட சிறையில் துணை ஜெயிலராக பணியாற்றி வரும் சங்கரன் என்பவர், சீருடையுடன் பூட்டிய அறையில் வைத்து பெல்லி நடனம் ஆடும் வீடியோ வெளியாகியுள்ளது. [மேலும்]
கடவுளுக்கு இணையான மனிதர்!
[ வெள்ளிக்கிழமை, 05 பெப்ரவரி 2016, 04:43.13 PM ] []
பணம் இருந்தால் மட்டும் போதாது, அதனைக் கொண்டு பிறருக்கு உதவி செய்வதற்கு நல்ல மனம் வேண்டும். [மேலும்]
லண்டன் பொண்னுக்கு தமிழ் கலாச்சாரப்படி வளைகாப்பு!
[ வெள்ளிக்கிழமை, 05 பெப்ரவரி 2016, 02:38.44 PM ] []
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இயற்கை மருத்துவரை மணந்துகொண்ட லண்டன் பொண்ணுக்கு தமிழ் கலாச்சாரப்படி வளைகாப்பு நடந்துள்ளது. [மேலும்]
என்னை ஆசைக்கு பயன்படுத்திக்கொண்ட அரசியல்வாதிகள் யார்? ரகசியமாக வெளியிட்ட சரிதா நாயர் (வீடியோ இணைப்பு)
[ வெள்ளிக்கிழமை, 05 பெப்ரவரி 2016, 12:28.49 PM ] []
ஆசைக்கு தன்னை பயன்படுத்தி கொண்ட அரசியல்வாதிகள் பட்டியலை சீலிட்ட உறையில் வைத்து நீதிபதியிடம் சரிதா நாயர் இன்று தாக்கல் செய்துள்ளது அரசியல் பிரமுகர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
தே.மு.தி.க.வில் போட்டியிட விருப்ப மனு கொடுத்த திருநங்கை!
[ வெள்ளிக்கிழமை, 05 பெப்ரவரி 2016, 10:32.32 AM ] []
சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து திருநங்கை ஒருவர் மனு கொடுத்துள்ளார். [மேலும்]