இந்தியச் செய்தி
ரத்தக்கண்ணீர் வடிக்கும் காங்கிரஸ்! வெங்காயம் காரணமா?
[ சனிக்கிழமை, 21 செப்ரெம்பர் 2013, 10:50.38 AM GMT +05:30 ]
மக்கள் கண்களில் இருந்து கண்ணீர் வரும் அளவிற்கு வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது.

சில்லறை விலையில் ஒரு கிலோ வெங்காயம் கிலோ 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் சமான்ய மக்கள் வெங்காயத்தை நினைத்துக் கூட பார்க்க அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் சாம்பாரில் தாளிப்பது போல வெங்காயத்தை வாசனைக்காக போடும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த வெங்காய விலை உயர்வு நடைபெற உள்ள 5 மாநில சட்டமன்ற தேர்தல்களிலும், வரும் லோக்சபா தேர்தலிலும் எதிரொலிக்கும் என்பதால் காங்கிரஸ் கட்சியினர் ரத்தக்கண்ணீர் வடிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே வெங்காய விலை உயர்வு பிரச்சினையினால் ஆட்சியைக் கைப்பற்றிய பாஜகவினரோ காங்கிரசுக்கு எதிரான மிகப்பெரிய ஆயுதம் கிடைத்து விட்டதென ஆனந்த கண்ணீர் விடத் தொடங்கியுள்ளனர்.

வெங்காயத்தின் விளைச்சல் அதிகரிக்கும் காலங்களில் கிலோ 15 முதல் 20 ரூபாய்க்கு விற்பனையாகும். ஆனால் கடந்த 5 மாத காலமாகவே வெங்காயத்தின் விலை உச்சத்தில்தான் உள்ளது.

சின்ன வெங்காயம் எனப்படும் சாம்பார் வெங்காயம் கடந்த சில வருடங்களாகவே 70ரூபாய்க்கு குறைவாக விற்பனை செய்யப்படுவதில்லை.

எனவே பல்லாரி எனப்படும் பெரிய வெங்காயத்தை போட்டு சமாளித்து வந்த மக்களுக்கு அந்த வெங்காயமும் 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் நினைத்து நினைத்து கண்ணீர் வடிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

வெங்காய விலையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. என்றாலும் அதற்கு பெரிய அளவில் பலன் கிடைக்கவில்லை.

தொடர்ந்து விலை ஏறு முகமாகவே உள்ளது. தற்போது தரமான வெங்காயம் கிலோ ரூ.75 முதல் ரூ.80 வரை விற்கப்படுகிறது.

வெங்காய ஏற்றுமதிக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன, இறக்குமதிக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. என்றாலும் விலை கிலோ ரூ.100 வரை உயரலாம் என்று வியாபாரிகள் கூறி வருகிறார்கள்.

வெங்காய விலை உயர்வு இந்திய அரசியலில் குறிப்பாக வடமாநில அரசியல் களத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவேதான் வெங்காய விலை உயரத் தொடங்கியதும் டெல்லியில் அரசியல் கட்சிகள் தங்கள் சொந்த செலவில் குறைந்த விலையில் வெங்காயத்தை விற்பனை செய்தனர்.

1980ல் வெங்காய விலை உயர்வு, தேர்தல் களத்தில் இடம் பிடித்தது. இதில் ஜனதா கட்சி ஆட்சியை எதிர்த்து இந்திராகாந்தி வெற்றி பெற்றார்.

1998ல் வெங்காய விலை கிலோ ரூ.70 முதல் ரூ.80 வரை விற்கப்பட்டது. இதனால் அப்போது மத்தியில் இருந்த ஜனதா கூட்டணி அரசு பெரும் சோதனையை சந்தித்தது.

இப்போது டெல்லி, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர், மிசோரம் மாநில சட்டசபைகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த நேரத்தில் வெங்காய விலை மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.

Print Send Feedback
One moment please..
 
 
   
   
   
   
   
 
பிந்திய 10 செய்திகள்

ஓட்டுப்போடுங்கள்...இல்லையெனில் வீட்டை விட்டு வெளியேறுங்கள்: மிரட்டிய பாஜக எம்எல்ஏ (வீடியோ இணைப்பு)

தாய்லாந்தில் கல்யாணம் கட்டும் இந்தியர்களுக்கு அடிக்கும் ஜாக்பாட்

திருமணம் செய்ய மறுத்த விரிவுரையாளர்: பழிவாங்க ஆசிட் வீசிய மாணவி (வீடியோ இணைப்பு)

கண்ணில்லா பெண்ணிற்கு கழிவறையில் பிறந்த குழந்தை: குழியில் விழுந்து மரணம்

கறுகிய உயிர்கள்…படகை சூழ்ந்த பறவைகள்!

தொலைக்காட்சி நிகழ்ச்சியால் பதவியை இழந்த தேவ்யானி

கலைஞருக்கு கடிதம்…தமிழகத்தில் தாமரை ஆளட்டும்: நடிகர் நெப்போலியன்

விசா மோசடியில் சிக்கிய தேவ்யானி மீது திடீர் நடவடிக்கை!

ரயிலில் குடிகார வாலிபர்களிடம் சிக்கிய தங்கை: டுவிட்டர் மூலம் காப்பாற்றிய அண்ணன்

ரஜினி அரசியலுக்கு வரணும்: உண்ணாவிரத போராட்டத்தில் குதிக்கும் ரசிகர்கள்

 
   
   
 
 
   
   
 
 
   
   
 
3ம் ஆண்டு நினைவுஞ்சலி
பெயர்: இந்திராதேவி கிட்ணமூர்த்தி
பிறந்த இடம்: யாழ். அரியாலை
வாழ்ந்த இடம்: பிரான்ஸ் Drancy
பிரசுரித்த திகதி: 20 டிசெம்பர் 2014
மரண அறிவித்தல்
பெயர்: வேலுப்பிள்ளை தம்பித்துரை
பிறந்த இடம்: யாழ். கட்டுவன்
வாழ்ந்த இடம்: லண்டன் Lewisham
பிரசுரித்த திகதி: 20 டிசெம்பர் 2014
45ம் நாள் நினைவஞ்சலி
பெயர்: கனகம்மா தம்பையா
பிறந்த இடம்: யாழ். பண்டத்தரிப்பு
வாழ்ந்த இடம்: யாழ். பண்டத்தரிப்பு
பிரசுரித்த திகதி: 19 டிசெம்பர் 2014
4ம் ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: சசிதரன் செல்வநாயகம்
பிறந்த இடம்: மட்டக்களப்பு
வாழ்ந்த இடம்: கல்முனை, கனடா Scarborough
பிரசுரித்த திகதி: 18 டிசெம்பர் 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: செல்லத்துரை பொன்னுத்துரை
பிறந்த இடம்: யாழ். சுதுமலை
வாழ்ந்த இடம்: யாழ். கொக்குவில், பிரான்ஸ்
பிரசுரித்த திகதி: 16 டிசெம்பர் 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: சந்தியாப்பிள்ளை மரியசீலன்
பிறந்த இடம்: வவுனியா குடியிருப்பு
வாழ்ந்த இடம்: பிரான்ஸ் Goussainville
பிரசுரித்த திகதி: 16 டிசெம்பர் 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: வைத்திலிங்கம் இரத்தினசிங்கம்
பிறந்த இடம்: யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்: நோர்வே
பிரசுரித்த திகதி: 16 டிசெம்பர் 2014
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
ஜெயலலிதாவுக்கு கிடைச்சது தண்டனை…எனக்கு அடிச்சாங்க சல்யூட்: விஜயகாந்த்
[ வெள்ளிக்கிழமை, 19 டிசெம்பர் 2014, 08:29.40 AM ] []
ஜெயலலிதா தண்டனை பெற்ற பிறகு தான் எனக்கு பொலிஸ்காரர்களிடமிருந்து சல்யூட் கிடைச்சது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். [மேலும்]
குஷ்புவை விமர்சிப்பவர்கள்…ஜெயலலிதாவை விமர்சிப்பார்களா? இளங்கோவன்
[ வெள்ளிக்கிழமை, 19 டிசெம்பர் 2014, 08:13.34 AM ] []
குஷ்புவை பற்றி விமர்சித்து எழுதுபவர்கள் ஜெயலலிதாவை பற்றி எழுதுவார்களா என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளார். [மேலும்]
நான் நடிகன்…சட்டசபைக்குள் நடனம் ஆடவில்லையே: முத்த சர்ச்சையில் சிக்கிய மந்திரி நறுக்
[ வெள்ளிக்கிழமை, 19 டிசெம்பர் 2014, 07:15.58 AM ] []
நடன கிளப்பில் இளம் பெண்ணுடன் ஆட்டம் போட்ட நடிகர் அம்பரீஷ்க்கு எதிராக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. [மேலும்]
பிழைக்க வந்த குஷ்புவை தமிழகத்தை விட்டே விரட்டி அடிப்போம்: வீரலட்சுமி தடால்
[ வெள்ளிக்கிழமை, 19 டிசெம்பர் 2014, 06:32.53 AM ] []
நடிகை குஷ்பு வீட்டை முற்றுகையிட முயற்சி செய்ததோடு மட்டுமல்லாமல் உருவபொம்மையை எரித்த 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். [மேலும்]
தடம்மாறும் இளசுகள்....தள்ளாடும் சமுதாயம்
[ வெள்ளிக்கிழமை, 19 டிசெம்பர் 2014, 06:26.17 AM ] []
என்னதான் மூளை முடுக்கெல்லாம் பலாத்காரங்கள் நடந்தாலும், சிறுவர்கள் பாலியல் சம்பவங்களில் ஈடுபடுவது சகித்துக்கொள்ள முடியாத ஒன்றாக உள்ளது. [மேலும்]