செய்தி
ஹைதராபாத் குண்டுவெடிப்பு வழக்கில் யாசின் பட்கல் கைது
[ ஞாயிற்றுக்கிழமை, 22 செப்ரெம்பர் 2013, 02:13.02 AM GMT +05:30 ]
ஹைதராபாத் இரட்டை குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக, இந்திய முஜாகிதீன் இயக்கத் தலைவர் யாசின் பட்கலை தேசிய புலனாய்வு அமைப்பினர் சனிக்கிழமை கைது செய்தனர்.

இந்தியாவில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக தேடப்பட்டு வந்த யாசின் பட்கல் இந்திய-நேபாள எல்லையில் கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருந்த இவரை, தேசிய புலனாய்வு அமைப்பினர் (என்ஐஏ) 4 நாள் காவலில் எடுத்து விசாரித்த பின்னர், தில்லியில் மாவட்ட நீதிமன்றத்தில் சனிக்கிழமை ஆஜர்படுத்தினர்.

அப்போது பட்கலை ஹைதராபாத் இரட்டை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கைது செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என தேசிய புலனாய்வு அமைப்பின் ஹைதராபாத் பிரிவு எஸ்.பி. தாக்கல் செய்திருந்த மனுவை நீதிபதி ஏற்றுக்கொண்டார். அதன்படி, பட்கலை கைது செய்யவும், 2 நாள் காவலில் எடுத்து விசாரிக்கவும் நீதிபதி அனுமதி அளித்தார்.

ஹைதராபாதில் தில்சுக்நகர் பகுதியில் உள்ள கொனார்க், வெங்கடாத்ரி ஆகிய இடங்களில் திரையரங்குகள் அருகே கடந்த பிப்ரவரி 21-ஆம் தேதி நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் 16 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பின் ஹைதராபாத் பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.

முன்னதாக, இந்த வழக்கு தொடர்பாக ஏற்கெனவே கைது செய்யப்பட்ட பட்கலின் கூட்டாளி அசதலுல்லா அக்தரையும் 2 நாள் காவலில் எடுத்து விசாரிக்க தில்லி நீதிமன்றம் கடந்த 17-ஆம் தேதி அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.

Print Send Feedback
One moment please..
 
 
   
   
   
   
   
 
பிந்திய 10 செய்திகள்
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
மரண அறிவித்தல்
பெயர்: அன்னலட்சுமி சீவரத்தினம்
பிறந்த இடம்: யாழ். கோண்டாவில் வடக்கு
வாழ்ந்த இடம்: பிரான்ஸ் Deuil-la-Barre
பிரசுரித்த திகதி: 6 செப்ரெம்பர் 2014
45ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பெயர்: ஆரணி ஆறுமுகதாசன்
பிறந்த இடம்: டென்மார்க்
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 14 செப்ரெம்பர் 2014
மரண அறிவித்தல்
பெயர்: திருராசா நடராசா
பிறந்த இடம்: யாழ். அனலைதீவு
வாழ்ந்த இடம்: சுவிஸ் Thun
பிரசுரித்த திகதி: 13 செப்ரெம்பர் 2014
மரண அறிவித்தல்
பெயர்: முத்துக்குமாரு ஸ்ரீதவராசா
பிறந்த இடம்: யாழ். அராலி வடக்கு
வாழ்ந்த இடம்: லண்டன் Welling
பிரசுரித்த திகதி: 12 செப்ரெம்பர் 2014
மரண அறிவித்தல்
பெயர்: வைரவி மார்க்கண்டு
பிறந்த இடம்: யாழ். சுதுமலை
வாழ்ந்த இடம்: யாழ். பலாலி
பிரசுரித்த திகதி: 8 செப்ரெம்பர் 2014
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
சென்னையில் பறந்த முதல் விமானம்!
[ சனிக்கிழமை, 13 செப்ரெம்பர் 2014, 06:29.44 AM ]
ஆசியாவிலேயே முதல் முறையாக வானில் பறந்த விமானம் தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் தான் பறந்துள்ளது. [மேலும்]
ஜெயலலிதாவை சந்திக்க ஆசைப்படும் ஹாலிவுட் நடிகர் யார்?
[ சனிக்கிழமை, 13 செப்ரெம்பர் 2014, 06:17.51 AM ] []
தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க விரும்புவதாக ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் கூறியுள்ளார். [மேலும்]
நடிகையை கல்யாணம் கட்டவில்லை: கதறும் மந்திரியின் மகன் (வீடியோ இணைப்பு)
[ சனிக்கிழமை, 13 செப்ரெம்பர் 2014, 06:12.44 AM ] []
நடிகை மைத்ரியை திருமணம் செய்யவில்லை என்று சதானந்தகவுடா மகன் பொலிசில் வாக்கு மூலம் அளித்துள்ளார். [மேலும்]
மீண்டும் நித்யானந்தாவுக்கு சோதனை!
[ சனிக்கிழமை, 13 செப்ரெம்பர் 2014, 05:30.13 AM ] []
நித்தியானந்தாவுக்கு நடத்தப்பட்ட ஆண்மை சோதனையில் பெங்களூர் சி.ஐ.டி பொலிசார் முற்றிலும் அதிருப்தி அடைந்துள்ளதால் மீண்டும் ஒரு பரிசோதனை நடத்த திட்டமிட்டுள்ளனர். [மேலும்]
மதுரையில் கோர சம்பவம்: மாணவிகள் மீது ஆசிட் வீச்சு
[ வெள்ளிக்கிழமை, 12 செப்ரெம்பர் 2014, 02:14.59 PM ] []
மதுரை மாவட்டத்தில் கல்லூரி மாணவிகள் இரண்டு பேர் மீது அடையாளம் தெரியாத நபர்கள் ஆசிட் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]