இந்தியாவில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் நேற்று நடைபெற்றது.
இதில் நாடு முழுவதுமுள்ள சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர். புதுடெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் வாக்களித்த முலாயம் சிங் முதலில் வாங்கிய வாக்குச் சீட்டில் பி.ஏ.சங்மாவிற்கு வாக்களித்தார்.
பின்னர் தான் தவறுதலாக வாக்களித்து விட்டதாக தெரிவித்து, மற்றொரு வாக்குச் சீட்டு வாங்கி பிரணாப் முகர்ஜிக்கு வாக்களித்தார்.
இதனை எதிர்த்து சங்மா தரப்பு தேர்தல் அதிகாரிகளிடம் முறையீடு செய்ததைத் தொடர்ந்து, தேர்தலில் முலாயம் சிங் அளித்த வாக்கு நிராகரிக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

|