மேரியின் சொந்த மாநிலமான மணிப்பூர் அரசு, இவருக்கு பரிசுத்தொகையாக ரூ. 50 லட்சம் வழங்கியுள்ளது. இத்துடன் 2 ஏக்கர் நிலத்தையும் பரிசாக வழங்கியுள்ளது.
தற்போது கூடுதல் காவல் துறை கண்காணிப்பாளராக பதவியில் உள்ள இவருக்கு துணை காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
அசாம் மாநில அரசு பரிசுத்தொகையாக ரூ. 20 லட்சம் அறிவித்துள்ளதோடு விளையாட்டு அகாடமி அமைப்பதற்கான வாய்ப்பையும் வழங்கியுள்ளது.
ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்றதன் மூலம் பெண்கள் குத்துச்சண்டை பிரிவில் பதக்கம் வெல்லும் முதல் வீராங்கனை என்ற பெருமையை மேரிகோம் பெற்றுள்ளார்.

|