இந்தியச் செய்தி
ஜனார்த்தன் ரெட்டிக்கு பிணை வழங்க ரூ.100 கோடி லஞ்சமாக பேரம் பேசப்பட்டது: நீதிபதி
[ சனிக்கிழமை, 21 யூலை 2012, 03:59.45 AM GMT +05:30 ]
கர்நாடக மாநிலம், பெல்லாரியில் ஓபுலாபுரம் என்ற இடத்தில் சுரங்க நிறுவனமொன்றை அம்மாநில முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன் ரெட்டி நடத்தி வந்தார்.

இதில் முறைகேடு நடந்ததாக இவர் மீது எழுந்த பல்வேறு குற்றச்சாட்டுகள் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்தியதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு தற்போது பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

அவர் மீதான வழக்கு ஐதராபாத்தில் உள்ள சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கை முதன்மை கூடுதல் சிறப்பு நீதிபதி டி. பட்டாபிராம ராவ் விசாரித்து வந்தார்.

ஜனார்த்தன் ரெட்டி பிணை வழங்கக்கோரி, சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் அவருக்கு பிணை வழங்கினால் சாட்சிகளை கலைத்து விடுவார் எனக் கூறி அதற்கு சி.பி.ஐ எதிர்ப்பு தெரிவித்தது.

இந்நிலையில் அவருக்கு மே 11ஆம் திகதி, சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் நிபந்தனை பிணை வழங்கியது. இதில் ரெட்டியை பிணையில் விடுவிக்க ரூ.1.80 கோடியை நீதிபதி பட்டாபிராமராவ் லஞ்சம் பெற்றார் என சி.பி.ஐ கண்டறிந்தது.

ஐதராபாத்தில் உள்ள வங்கி லாக்கரில் கணக்கில் வராத ஒரு கோடியே 80 லட்ச ரூபாய் இருந்ததை சி.பி.ஐ கண்டுபிடித்து கைப்பற்றியது.

அந்த லாக்கரின் சாவி, நீதிபதி பட்டாபிராமராவின் மகனிடம் இருந்து கைப்பற்றப்பட்டது. இதையடுத்து நீதிபதி பட்டாபிராமராவ் தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டார். மேலும் இவ்வழக்கு தொடர்பாக இம்மாத தொடக்கத்தில் இரண்டு நீதிபதிகள் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் ஒருவரான லட்சுமி நரசிம்மராவிடம் சி.பி.ஐ அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ஜனார்த்தன் ரெட்டி பிணையில் வெளிவர அவரது குடும்பத்தினர் தனக்கு ரூ.100 கோடி வரை தர முன்வந்ததாக தெரிவித்துள்ளார்.

கர்நாடக முன்னாள் அமைச்சர் ஒருவர் பிணையில் வெளிவர ரூ.100 கோடி வரை லஞ்சம் தர முன்வந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Print Send Feedback
One moment please..
 
 
   
   
   
   
   
 
பிந்திய 10 செய்திகள்

குற்றவாளியை சித்ரவதை செய்து கொலை செய்த பொலிசாரால் பரபரப்பு

“நான் சினிமாவுக்கு போகிறேன்”-டெல்லி மாணவி கடைசியாக சொன்னது: தாய் கண்ணீர் சாட்சியம்

தண்ணீர் குடிக்க வந்த யானை பரிதாபமாக இறந்தது

கல்லூரி மாணவரை கடத்தி ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டிய கும்பல் கைது

திடீரென போராட்டம் வாபஸ்: இன்று முதல் குடிநீர் கேன் விற்பனை தொடங்குகிறது

ஒரு இந்தியன் கூட பசியோடு இருக்க கூடாது: ராகுல் காந்தி ஆவேசம்

நட்புடன் பழகிய தோழிக்கு நடந்த விபரீதம்

வெறும் 457 கிராம் எடையில் பிறந்த குழந்தை: லிம்கா புத்தகத்தில் இடம்பிடித்தது

பேச்சுத்திறனற்ற மாணவிகளுக்கு பாலியல் சித்ரவதை: பள்ளி நிர்வாகி கைது

போலீசார் சித்ரவதைக்கு கைதி பலி : 4 போலீசார் சஸ்பெண்ட்

 
   
   
 
 
   
   
 
 
   
   
 
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
அகாலமரணம்
பெயர்: ஜோதினி இராஜ்குமார்
பிறந்த இடம்: செட்டிகுளம்
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 14 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: தவராசா பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
அகாலமரணம்
பெயர்: வயிரமுத்து தியாகராசா
பிறந்த இடம்: மன்னார் ஆத்திமோட்டை
வாழ்ந்த இடம்: இலண்டன்
பிரசுரித்த திகதி: 11 ஏப்ரல் 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றிநவிலலும்
பெயர்: இராசபூவதி மாணிக்கவாசகர்
பிறந்த இடம்: சாவகச்சேரி
வாழ்ந்த இடம்: மல்லாகம், வெள்ளவத்தை
பிரசுரித்த திகதி: 14 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
இறந்து போன மனைவிக்காக குட்டி தாஜ்மஹாலை கட்டிய கணவர்
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 08:48.19 AM ]
உத்தர பிரதேசத்தில் ஓய்வு பெற்ற போஸ்ட் மாஸ்டர் தனது மனைவியின் நினைவில் தாஜ்மகாலைப் போன்றே ஒரு குட்டி தாஜ்மகாலை கட்டியுள்ளார். [மேலும்]
அவுஸ்திரேலியாவில் இந்திய மாணவி கற்பழித்துக் கொலை: இளைஞருக்கு 45 வருடம் சிறை
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 07:29.01 AM ]
அவுஸ்திரேலியாவில் இந்தியாவை சேர்ந்த 24 வயதுடைய மாணவியொருவர் கற்பழிக்கபட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு 45 வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
நான் ஒரு அப்பாவி: ஸ்ரீசாந்தின் புலம்பல்
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 07:02.35 AM ]
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீரர் ஸ்ரீசாந்த். சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வது இவரது வாடிக்கையாகும். [மேலும்]
சீனாவை கண்காணிக்க புதிய விமானப்படை தளத்தை அமைக்கிறது இந்தியா
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 04:38.01 AM ]
இந்திய பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதால், அதை கண்காணிக்க வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது. [மேலும்]
மதுரையில் குண்டு வெடிப்பு: 3 பேர் படுகாயம்
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 03:52.18 AM ]
மதுரை பெத்தானியாபுரம் அண்ணா மெயின் வீதிக்கருகில் உள்ள குப்பைத் தொட்டியில் குண்டு வெடித்ததில் மூன்று பேர் படுகாயமடைந்ததுடன், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]