தமிழ்நாட்டுச் செய்தி
பெற்றோர்கள் போராட்டம் நடத்தியதன் எதிரொலி: நாளை ஜியோன் பள்ளி திறப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 29 யூலை 2012, 01:21.30 PM GMT +05:30 ]
சென்னை ஜியோன் மேல்நிலைப்பள்ளியை திறக்க கோரி ஆயிரத்திற்கும் அதிகமானோர் போராட்டம் நடத்தியதால், நாளை பள்ளி திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை சேலையூரில் உள்ள ஜியோன் மேல்நிலைப்பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ருதி, தான் பயணித்த பள்ளிப் பேருந்தில் இருந்த ஓட்டை வழியே கீழே விழுந்து அதே பேருந்தில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தாள்.

இதையடுத்து பள்ளி மூடப்பட்டுள்ளது. இந்தப் பள்ளி தவிர மாடம்பாக்கம், செம்பாக்கம் ஆகிய இடங்களில் உள்ள இதன் கிளைப் பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் பெற்றோர்களும், மாணவர்களும் குழப்பமடைந்துள்ளனர்.

இந்த நிலையில் சேலையூர் மெயின் பள்ளிக்கு இன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெற்றோர்கள் திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளியை உடனே திறக்க வேண்டும், மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படாமல் உறுதி செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து நாளை முதல் அனைத்து ஜியோன் பள்ளிகளும் வழக்கம் போல இயங்கும் என்று பள்ளி நிர்வாகம் அறிவித்தது.

அதேசமயம், மறு உத்தரவு வரும் வரை பள்ளிப் பேருந்துகள், வேன்கள் இயக்கப்பட மாட்டாது என்றும் ஜியோன் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், ஜியோன் பள்ளிக்குச் சொந்தமான 32 பேருந்துகளையும், போக்குவரத்து ஆய்வாளர்கள் குழு சோதனையிட்டது.

இதில் நான்கு பேருந்துகளில் விதி மீறல் இருப்பதாக தெரிவித்த அதிகாரிகள் அதை சரி செய்த பின்னரை அவற்றை இயக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Print Send Feedback
One moment please..
 
 
   
   
   
   
   
 
பிந்திய 10 செய்திகள்

தாலி கட்டும் தருணதில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்

கள்ளக் காதலை கணவன் கண்டித்ததால் மனைவி ஆசிட் குடித்து தற்கொலை

பாகிஸ்தான் நோயாளிக்கு இதயம் கொடுத்து காப்பாற்றிய இந்தியா

சுகாதாரத் துறையில் இணைந்து செயல்பட இந்தியா-சீனா முடிவு

ஐ.பி.எல். சூதாட்டத்தில் மேலும் கொல்கத்தாவில் 9-தரகர்கள் கைது

கணவர் கொலை வழக்கில் சாட்சி சொன்ன மனைவி கழுத்தறுத்து படுகொலை..!

மனைவி மீது சந்தேகப்பட்டு 3 குழந்தைகளை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட வாலிபர்

பணியில் ஈடுபட்டிருந்த பொலிசாரிடையே மோதல்: ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதால் பரபரப்பு

பொருளாதாரத்தில் இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளது: பிரதமர்

பேஸ்புக்கை பயன்படுத்துவதற்கு வயது வரம்பு: மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

 
   
   
 
 
   
   
 
 
   
   
 
28 ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: தாமோதரம்பிள்ளை சேதுப்பிள்ளை குடும்பத்தினர்
பிறந்த இடம்: நெடுந்தீவு மேற்கு
வாழ்ந்த இடம்: திருகோணமலை
பிரசுரித்த திகதி: 23 மே 2013
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: மதுரநாயகம் பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
காதல் திருமணம் செய்த தங்கையை கொன்றது ஏன்? அண்ணன் பரபரப்பு வாக்குமூலம்
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 06:26.03 AM ]
காதல் திருமணம் செய்து கொண்ட தங்கையை கொன்றது ஏன் என பரபரப்பான வாக்குமூலத்தை அளித்துள்ளார் அப்பெண்ணின் அண்ணன். [மேலும்]
தமிழ்நாட்டில் 2000 போலி மருத்துவர்கள்: அதிர்ச்சி தகவல்
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 05:13.45 AM ]
தமிழ்நாட்டில் இரண்டாயிரம் போலி மருத்துவர்கள் உள்ளனர் என்கிற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டு உள்ளது இந்திய மருத்துவர்கள் சங்கம். [மேலும்]
இன்று ராஜீவ் காந்தி நினைவு தினம்: தீவிரவாத எதிர்ப்பு தினமாக கடைபிடிப்பு
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 03:53.47 AM ]
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினமான இன்று தீவிரவாத எதிர்ப்பு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. [மேலும்]
3 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று தற்கொலைக்கு முயன்ற தாய்
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 03:13.35 AM ]
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தாலுகா அம்மயப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் இஸ்மாயில், லாரி டிரைவர். [மேலும்]
மார்பக புற்று நோயை அறிந்து கொள்ளும் அதிநவீன கருவி அறிமுகம்
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 08:13.34 AM ]
பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்று நோயை துல்லியமாக கண்டுபிடிக்கும் அதிநவீன "அமுலெட்" கருவி இந்தியாவிலேயே முதன் முதலாக டெல்லியில் நேற்று செயல்பாட்டுக்கு வந்தது. [மேலும்]