இந்தியச் செய்தி
மேயர் மீனாட்சி படப்பாணியில் முன்னேறிய டெல்லிப் பெண்
[ வெள்ளிக்கிழமை, 20 ஏப்ரல் 2012, 04:40.30 AM GMT +05:30 ]
தமிழில் 35 ஆண்டுகளுக்கு முன்பு ஜெய்சங்கர், கே.ஆர்.விஜயா நடித்த மேயர் மீனாட்சி திரைப்படம் திரைக்கு வந்தது.

இப்படத்தில் துப்பரவுத்தொழிலாளியான கே.ஆர்.விஜயா தன்னுடைய அயராத உழைப்பால் அப்பகுதி மேயர் ஆவார் என்பதே திரைக்கதையாகும்.

இந்நிலையில் மேயர் மீனாட்சி திரைக்கதை டெல்லி துப்பரவுத் தொழிலாளியின் வாழ்வில் உண்மையாகியுள்ளது.

தெற்கு டெல்லியில் கீடா வார்டில் 14 ஆண்டுகளாக கையில் பெரிய துடைப்பத்துடன் வந்து தெருக்களை சுத்தம் செய்பவர் ராஜ்குமாரி.

ஆனால், அவரது வாழ்வு, அடுத்த வாரம் முதல் மாறப் போகிறது. அது மட்டுமின்றி, தெருக்கள் தூய்மையாக இல்லை என்றால் இவரை மக்கள் கேட்பார்கள்.

இவரும் மற்ற பணியாளர்களை கேள்வி கேட்பார். ஏனெனில் கீடா வார்டு புதிய கவுன்சிலர் ராஜ்குமாரி தான். டெல்லி மாநகராட்சி தேர்தலில் 50 சதவீத வார்டுகள், பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால் பல பெண்கள், அரசியலில் காலடி எடுத்து வைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

மாநகராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வரும் ராஜ்குமாரியை கீடா வார்டில் வேட்பாளராக பாரதிய ஜனதா கட்சி நிறுத்தியது.

இவர், 4,468 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடித்தார். இப்போது, கவுன்சிலராக பொறுப்பேற்க உள்ளார்.

இது பற்றி ராஜ்குமாரி கூறுகையில், துப்புரவு பணியை எப்போது சிறப்பாக செய்வேன். என் மீது நம்பிக்கை வைத்து என்னை கவுன்சிலராக்கியுள்ள மக்களை ஒரு போதும் ஏமாற்ற மாட்டேன். மக்களின் நம்பிக்கைகளை நிறைவேற்றுவேன் என்று தெரிவித்துள்ளார்.

Print Send Feedback
One moment please..
 
 
   
   
   
   
   
 
பிந்திய 10 செய்திகள்

திடீரென போராட்டம் வாபஸ்: இன்று முதல் குடிநீர் கேன் விற்பனை தொடங்குகிறது

ஒரு இந்தியன் கூட பசியோடு இருக்க கூடாது: ராகுல் காந்தி ஆவேசம்

நட்புடன் பழகிய தோழிக்கு நடந்த விபரீதம்

வெறும் 457 கிராம் எடையில் பிறந்த குழந்தை: லிம்கா புத்தகத்தில் இடம்பிடித்தது

பேச்சுத்திறனற்ற மாணவிகளுக்கு பாலியல் சித்ரவதை: பள்ளி நிர்வாகி கைது

போலீசார் சித்ரவதைக்கு கைதி பலி : 4 போலீசார் சஸ்பெண்ட்

பிரதமரை மாற்றுவது பற்றி யாரும் நினைக்க வேண்டாம்: காங்கிரஸ் திட்டவட்டம்

மனைவியை சந்தேகப்பட்டு கொடுமைப்படுத்திய கணவனுக்கு 10 ஆண்டு சிறை

சூதாட்டத்திற்காக ஸ்ரீசாந்த் பிளாக்மெயில் செய்யப்பட்டாரா..!

ஐ.பி.எல்.சூதாட்ட தரகர்களின் தலைவர் வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டம்

 
   
   
 
 
   
   
 
 
   
   
 
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
அகாலமரணம்
பெயர்: ஜோதினி இராஜ்குமார்
பிறந்த இடம்: செட்டிகுளம்
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 14 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: தவராசா பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
அகாலமரணம்
பெயர்: வயிரமுத்து தியாகராசா
பிறந்த இடம்: மன்னார் ஆத்திமோட்டை
வாழ்ந்த இடம்: இலண்டன்
பிரசுரித்த திகதி: 11 ஏப்ரல் 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றிநவிலலும்
பெயர்: இராசபூவதி மாணிக்கவாசகர்
பிறந்த இடம்: சாவகச்சேரி
வாழ்ந்த இடம்: மல்லாகம், வெள்ளவத்தை
பிரசுரித்த திகதி: 14 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
இறந்து போன மனைவிக்காக குட்டி தாஜ்மஹாலை கட்டிய கணவர்
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 08:48.19 AM ]
உத்தர பிரதேசத்தில் ஓய்வு பெற்ற போஸ்ட் மாஸ்டர் தனது மனைவியின் நினைவில் தாஜ்மகாலைப் போன்றே ஒரு குட்டி தாஜ்மகாலை கட்டியுள்ளார். [மேலும்]
அவுஸ்திரேலியாவில் இந்திய மாணவி கற்பழித்துக் கொலை: இளைஞருக்கு 45 வருடம் சிறை
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 07:29.01 AM ]
அவுஸ்திரேலியாவில் இந்தியாவை சேர்ந்த 24 வயதுடைய மாணவியொருவர் கற்பழிக்கபட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு 45 வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
நான் ஒரு அப்பாவி: ஸ்ரீசாந்தின் புலம்பல்
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 07:02.35 AM ]
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீரர் ஸ்ரீசாந்த். சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வது இவரது வாடிக்கையாகும். [மேலும்]
சீனாவை கண்காணிக்க புதிய விமானப்படை தளத்தை அமைக்கிறது இந்தியா
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 04:38.01 AM ]
இந்திய பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதால், அதை கண்காணிக்க வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது. [மேலும்]
மதுரையில் குண்டு வெடிப்பு: 3 பேர் படுகாயம்
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 03:52.18 AM ]
மதுரை பெத்தானியாபுரம் அண்ணா மெயின் வீதிக்கருகில் உள்ள குப்பைத் தொட்டியில் குண்டு வெடித்ததில் மூன்று பேர் படுகாயமடைந்ததுடன், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]